சல்மான் கான் ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கு
தீர்ப்பு மார்ச்
3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
சட்டவிரோதமாக
ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும்,
பயன்படுத்தியதாகவும் பிரபல ஹிந்தி
நடிகர் சல்மான்
கான் மீது
தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து இன்று
தீர்ப்பு வழங்கப்படுவதாக
இருந்தது. இந்நிலையில்
இந்த வழக்கின்
தீர்ப்பு மார்ச்
ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மானை
வேட்டையாடியது தொடர்பாக பிரபல இந்தி நடிகர்
சல்மான் கான்
மீது தொடரப்பட்ட
வழக்கில் ராஜஸ்தான்
நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து
2007 ஆம் ஆண்டு
5 ஆண்டு சிறை
தண்டனை விதித்து
தீர்ப்பளித்தது.
அப்போது
சல்மான் கான்
சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும்,
இதற்காக வைத்திருந்த
லைசன்ஸ் காலாவதியானதாக
பொலிஸார் கூறியிருந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment