பூமி சூரியனை சுற்றவில்லை சூரியன்தான் பூமியை சுற்றுகிறது
சவூதி அரேபிய உலமா ஒருவர் கூறுகின்றார்


பூமி சுற்றுகிறது. அது சூரியனை வட்ட வடிவில் சுற்றி வருகிறது என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையல்ல என சவூதி அரேபியா உலமா ஒருவர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அந்த உலமா வின் பெயர் ஷேக் பந்தர் அல்-ஹைபாரி. இவரிடம் பூமியை பற்றி மாணவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் இதுபோன்ற ஒரு பதிலை கூறியுள்ளார்.
மாணவர்களிடம் பூமி சுற்றவில்லை. ஆடாமல் அசையாமல் ஓரிடத்தில் அப்படியே நிற்கிறது ஆனால் பூமியை சூரியன்தான் சுற்ரி வருகிறது என்று  கூறியுள்ளார் அதற்கு ஒரு  எடுத்துக் காட்டும் அவர் தெரிவித்துள்ளார். தண்ணீர் நிரப்பப்பட்டு மூடப்பட்ட கப் ஒன்றை கையில் அவர் பிடித்துக் கொண்டார். பின்னர் நாம் அனைவரும் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் சீனா செல்வதாக வைத்து கொள்வோம். அப்போது நடுவானில்    விமானம் நிறுத்தப்பட்டால் சீனா தானாகவே நம்மை நோக்கி வர வேண்டும்.

எதிர் திசையில் பூமி சுழல்வதாக இருந்தால் விமானம் சீனாவை சென்றடைய முடியாது. ஏனென்றால் சீனாவும் சுழல்கிறதே என்று மாணவர்களுக்கு ஆதாரம் ஒன்றைக் காட்டியுள்ளார்.இந்த வீடியோ ஒரு டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. உலமாவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. அவர் கேட்பதில் ஒரு 'logic' இருக்கிறது. அது தவறு என்றால் 'விஞ்ஞான ரீதியான' விளக்கத்தை தாருங்கள். அவ்வளவு தான்

    ReplyDelete
  2. அவர் கேட்பதில் ஒரு 'logic' இருக்கிறது. அது தவறு என்றால் 'விஞ்ஞான ரீதியான' விளக்கத்தை தாருங்கள். அவ்வளவு தான்

    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top