உலகக் கிண்ணக் கிரிக்கெட் – 2015
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில்
ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் 285 ஓட்டங்கள் குவிப்பு
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில்
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் 285 ஓட்டங்கள் குவித்துள்ளது.
விறுவிறுப்பாக
நடந்து வரும்
உலகக் கிண்ணக் கிரிக்கெட் திருவிழாவில் இன்று நெல்சன் மைதானத்தில்
நடைபெறும் லீக்
ஆட்டத்தில் ஜிம்பாப்வே–ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அணிகள் (பி
பிரிவு) மோதுகின்றன.
தொடக்க ஆட்டத்தில்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 62 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்த சிகும்புரா
தலைமையிலான ஜிம்பாப்வே அணி முதலாவது வெற்றியை
பதிவு செய்யும்
வேட்கையுடன் களமிறங்கியுள்ளது. நாணயச் சுழற்சியில்
வென்ற ஜிம்பாப்வே அணி முதலில்
பீல்டிங் தேர்வு
செய்தது.
இதனையடுத்து
துடுபெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அணி 285 ஓட்டங்கள்
குவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி
50 ஓவர்களுக்கு 7 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்கள் எடுத்தது.
அணியில் அதிகப்பட்சமாக
சைமான் அன்வர்
67 ஓட்டங்கள் எடுத்தார். குர்ரம் கான் 45 ஓட்டங்கள்
எடுத்தார். மற்ற வீரர்களும் தங்களது
பங்குக்கு போதுமான
ஓட்டங்களை அணிக்கு
சேர்த்தனர். இதனையடுத்து 286 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி
என்ற இலக்குடன்
ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து விளையாடி
வருகிறது. ஜிம்பாப்வே
39 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களுடன்
விளையாடி வருகிறது.



0 comments:
Post a Comment