உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி- 2015
ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இலங்கை 20 ஓவர்களில் 76/4

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 232 ஓட்டங்கள் எடுத்தது.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில்பிரிவில் டுனெடினில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், 1996–ம் ஆண்டு சாம்பியனான இலங்கை அணி, அறிமுக அணியான ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டுள்ளது. தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் வீழ்ந்தது.
மேத்யூஸ் தலைமையிலான வலுவான இலங்கை அணியின் ஆட்டத்துக்கு, ஆப்கானிஸ்தான் அணி ஈடுகொடுப்பது கடினம் என்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது. இலங்கை அணி நாணயற் சுழற்சியில் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்து விளையாடிய முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முழுமையான ஓவர்கள் விளையாட முயற்சி செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணிக்கு 233 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் அஷ்கார் அதிகப்பட்சமாக 54 ஓட்டங்கள் எடுத்தார்
இதனையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. திரிமன்னே (LAHIRU THIRIMANNE), திலகரத்ன தில்சான் (TILLAKARATNE DILSHAN) ஆகியோர் முதல் பந்திலேயே விக்கெட்டுக்களை இழந்தார்கள் அறிமுக அணியான ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இரண்டு பந்துகளிலே இரண்டு விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தது.
தவ்லத் ஜட்ரன் DAWLAT ZADRAN, ஷாபூர் ஜட்ரன் SHAPOOR ZADRAN  , ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும்  ஹமித் ஹசன் HAMID HASSAN  இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர். குமார் சங்கக்கார   7 ஓட்டங்களில் தனது விக்கெட்டை இழந்தார்.. ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சு இலங்கை அணியை சற்று எச்சரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இலங்கை அணி 19 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களுடன் விளையாடி வருகிறது. அணியில்  மஹல ஜெயவர்த்தன  35 ஓட்டங்களுடனும், மத்யூஸ் 8 ஓட்டங்களுடன் விளையாடி வருகின்றனர்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top