உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி- 2015
அயர்லாந்து
அணி 2 விக்கெட்களால் வெற்றி
பிரிஸ்பென்
நகரில் இன்று
நடந்த உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியில்
அயர்லாந்து - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள்
மோதின.இதில்
நாணயச் சுழற்சியில் வென்ற அயர்லாந்து
பந்து வீச்சை தேர்வு
செய்தது. இதையடுத்து
களம் இறங்கிய
ஐக்கிய அரபு
எமிரேட் அணி
50 ஓவரில் 9 விக்கெட் இழந்து 278 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக அன்வர் 106 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அம்ஜத் அலி 45 ஓட்டங்களும், ஜாவீத்
42 ஓட்டங்களும் எடுத்தனர். இதையடுத்து அயர்லாந்து அணிக்கு
279 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து
களம் இறங்கிய
அயர்லாந்து அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்
இழப்பிற்கு 279 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment