சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில்
அனைவரது மனங்களையும் வென்ற
இலங்கைச் சிறுமி ஜெசிக்கா ஜுட்
ஒரு கிலோ வெற்றித் தங்கத்தை சிறுவர்
இல்லங்களுக்கு உதவினார்!
இலங்கைச்
சிறுமியான ஜெசிக்கா ஜுட் இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சியின் சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில்
பங்கேற்று ஒரு கிலோ தங்கத்தைப்பெற்று இலங்கைத்
தமிழர்களுக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.
இலங்கைச்
சிறுமியான ஜெசிக்கா ஜுட் குடும்பத்தினர் கடந்த கால அசாதாரண சூழல் காரணமாக புலம்பெயர்ந்து
சென்று கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெசிக்கா மீண்டும்
வயல்காட் சுற்றின் ஊடாக மக்களது பூரண ஆதரவுடன் உள்ளே நுழைந்தார். இறுதிப் போட்டிவரை சிறப்பாக தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர்.
இறுதிப் போட்டியிலும் இலங்கை நினைவுகளை கொண்டுவரும் பாடல் ஒன்றினைப் பாடி அனைவரையும்
கண்ணீர் சிந்த வைத்தவர் .
ஒட்டுமொத்த
தமிழ் மக்களின் வாக்குகளுடனும் 2ஆம் இடத்திற்கு தெரிவாகி ஒரு கிலோ தங்கத்தை பெற்றுக்
கொண்டார். இதுமட்டுமல்ல தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையில் ஒரு பகுதியை இந்தியாவில்
உள்ள அனாதைச் சிறுவர் இல்லங்களுக்கும் ஒரு பகுதியை இலங்கையில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கும்
வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனூடாகவும்
ஜெசிக்கா ஜுட் மேலும் அனைவரது மனங்களையும் நிறைத்துள்ளார்.
இன்று
இடம்பெற்ற சுப்பர்
சிங்கர் நிகழ்ச்சியில்
ஜெசிக்கா ஜுட்
உடன் மேலும்
5 பாடகர்கள் பங்கு பற்றினார்கள். இவர்களில் ஹரிப்பிரியா
3வது இடத்தையும்,
ஜெசிக்கா ஜுட்
2வதுஇடத்தையும், பெங்களூரைச் சேர்ந்த ஸ்பூர்தி 1வது
இடத்தையும், பெற்றுக்கொண்டனர்.
ஜெசிக்கா
“அழகு மலர்
ஆட” பாடலை
முதற் சுற்றிலும்
2ம் சுற்றில்
“தோல்வி நிலையென
நினைத்தால்/விடைகொடு எங்கள் நாடே” என்ற
பாடல்களையும் பாடினார்.
https://www.youtube.com/watch?v=qxLYzDBSnZM
0 comments:
Post a Comment