இலங்கையின்
மீதான போர் குற்ற விசாரணை
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்காணிப்பு
- செய்தி தொடர்பாளர் தெரிவிப்பு
இலங்கை
அரசு மேற்கொள்ள
உள்ள போர்
குற்ற விசாரணையை,
ஐ.நா.
பொதுச் செயலாளர்
பான் கி
மூன் கண்காணிக்க
திட்டமிட்டு உள்ளார் என, அவரது செய்தி
தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில்,
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் அமைந்துள்ள
புதிய அரசு,
விடுதலைப் புலிகளுடனான
இறுதிக் கட்ட
போரில் நடைபெற்ற
மனித உரிமை
மீறல்கள் குறித்து
விசாரிக்க உள்ளதாக
தெரிவித்துள்ளது.
இவ்விசாரணையின்
முன்னேற்றம் குறித்து, பான் கி மூன்
கவனிக்க திட்டமிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள தமிழர் பிரச்னைக்கு சமரச தீர்வு
காண்பதுடன், மனித உரிமைகளை காக்கும் பொறுப்பும்
இலங்கை அரசுக்கு
உள்ளது. அதிக
பொறுப்புடன் செயலாற்றுவதன் மூலம், இலங்கையில் அமைதி,
ஜனநாயகம் ஆகியவை
செழிக்கும். நாடும் வளர்ச்சி காணும். இதை,
அண்மையில் தம்மை
சந்தித்த இலங்கை
வெளிவிவகார அமைச்சர்
மங்கள சமரவீரவிடம்,
பான் கி
மூன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.
இலங்கையில்
நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த
விசாரணை அறிக்கை,
எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி தாக்கல்
செய்யப்பட இருந்தது.
இப்போர்க்குற்றம் தொடர்பாக, உள்நாட்டு விசாரணை மேற்கொள்ள
உள்ளதால், விசாரணை
அறிக்கை தாக்கல்
செய்வதை தள்ளி
வைக்க வேண்டும்
என, இலங்கை
அரசு கோரிக்கை
விடுத்தது.
இதைத்
தொடர்ந்து, அறிக்கை தாக்கல் செய்வது, ஆறு
மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமை
கவுன்சில் தலைவர்
சையீத் அல்
ஹுஸைன், நேற்று
முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,
இலங்கை அரசின்
விசாரணை கண்காணிக்கப்படும்
என, ஐ.நா. பொதுச்
செயலாளர் பான்
கி மூன்,
தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment