நல்லாட்சி அரசாங்கத்தில்
நேர்மையான அரசியல் அனுபவங்களையும்
சேவைகளையும்
முஸ்லிம் சமூகத்திற்கு வழங்குவதற்கு நாடாளுமன்றம்
செல்லவேண்டும்
முன்னாள் அமைச்சர் மன்சூரிடம் புத்திஜீவிகள்
கோரிக்கை.
முன்னாள்
வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில்
திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என அம்மாவட்டத்திலுள்ள
புதிஜீவிகள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும்
பொதுத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து
போட்டியிடுவதன் மூலமாகவே அதிக ஆசனங்களைப் பெற முடியும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியிருக்கிறார்.
சமுகத்தின்
சார்பாக நாடாளுமன்றத்திற்குச் செல்லும் எமது பிரதிநிதிகள் சகல விடயங்களிலும் பொருத்தமானவர்களாகவும்
பாஷைகளைப் புரிந்து செயல்படுபவர்களாகவும் பதவியை அமானிதமாகக் கருதி மக்களுக்கு சேவை
செய்யக்கூடியவர்களாகவும் இருத்தல் அவசியமாகும்.
தங்களின்
பதவிக் காலத்தில் இதுபோன்று செயல்பட்டு நல்லாட்சி செய்ததுடன் பரவலாக மாவட்டத்திலுள்ள
சகல பிரதேசங்களுக்கும் அலுப்பில்லாமல் ஓடோடி சேவைகள் செய்த நீங்களும் தற்போதுள்ள இக்காலகட்டத்தில்
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் மக்கள் சார்பாக இருக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.
இது
மாத்திரமல்லாமல், கடந்த ஆட்சி காலங்களில் தமிழ், முஸ்லிம் உறவுகளைப் பேணிக் காப்பதிலும்
இனப்பிரச்சினை சம்பந்தமான பேச்சுவார்த்தைகள், மற்றும் கலந்துரையாடல்களில் பங்குபற்றி
இது குறித்த விடயங்களை நன்கு அறிந்து அனுபவங்களைப் பெற்றவராக நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.
டபிள்யூ.
தஹநாயக்கா போன்ற அரசியல்வாதிகள் தனது இறுதிக் காலம் வரை நாடாளுமன்றத்திற்குச் சென்று
சமுகத்திற்காகவும் நாட்டிற்காகவும் சேவை செய்துள்ளார்.
அந்த
வகையில் உங்களின் நேர்மையான அரசியல் அனுபவங்களையும் சேவைகளையும் முஸ்லிம் சமூகத்திற்கும்
குறிப்பாக கிழக்குப் பிரதேச மக்கள் நன்மை பெறவும் உதவுவதற்கு நீங்கள் அரசியலுக்கு மீண்டும்
முன்வரல் வேண்டும். இவ்வாறு புத்திஜீவிகள் முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களிடம் தெரிவித்து
வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment