சுகாதார ராஜாங்க அமைச்சர் ஹசனலி சாய்ந்தமருது
வைத்தியசாலைக்கு விஜயம்,
வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் அடங்கிய
மகஜர் கையளிப்பு
சுகாதார
ராஜாங்க அமைச்சர்
எம்.ரி.ஹசன் அலி நேற்று
23 ஆம் திகதி திங்கள்கிழமை சாய்ந்தமருது மாவட்ட
வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
ராஜாங்க
அமைச்சரை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி
டாக்டர் என்.ஆரிப் தலைமையிலான
குழுவினர் வரவேற்றனர்.
டாக்டர்
என்.ஆரிப்
தலைமையில் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது சாய்ந்தமருது
மாவட்ட வைத்தியசாலையின்
தேவைகள் மற்றும்
குறைபாடுகள் அடங்கிய மகஜர் ஒன்று வைத்தியசாலை
பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப் மற்றும்
வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயலாளர் றியாத்
ஏ.மஜீத்
ஆகியோரினால் சுகாதார ராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
ராஜாங்க
அமைச்சர் ஹசன்
அலிக்கு வைத்தியசாலை
நிர்வாகத்தினரால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்
கல்முனை மாநகர
சபை உறுப்பினர்
ஏ.ஏ.பஷீர், கிழக்கு
மாகாண முதலமைச்சரின்
இணைப்புச் செயலாளர்
எஸ்.எல்.எம்.பளீல்
உட்பட மேலும் பலர் பங்கேற்றிருந்தனர்.
0 comments:
Post a Comment