ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன இன்று அதிகாலை
திருப்பதி ஏழுமலையான்
கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்
இந்தியா
சென்றுள்ள
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையான்
கோவிலில் இன்று
18 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை சுவாமி தரிசனம்
செய்தார்.
முன்னதாக,
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன, தனது
மனைவி ஜெயந்தி
உட்பட 24 பேர்
குழுவுடன், நேற்று பீகார் மாநிலம் புத்தகயாவுக்கு
சென்றார். மகாபோதி
ஆலயத்தில் புத்தருக்கு
ஞானம் கிடைத்த
போதி மரத்தின்
கீழ் நின்றவாறு,
15 நிமிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரார்த்தனை
செய்தார்.
மகாபோதி
ஆலயத்தில் 1 மணி நேரமாக பல்வேறு பிரார்த்தனைகளை
மேற்கொண்ட அவர்,
பின்னர், அருகில்
உள்ள இலங்கை
மடத்துக்கு சென்றார். அங்கு, மகாபோதி கோயில்
நிர்வாகம் சார்பாக,
தேநீர் விருந்து
அளிக்கப்பட்டது. இதையடுத்து, கயா விமான நிலையத்துக்கு
சென்ற ஜனாதிபதி
, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலமாக, திருப்பதி
சென்றார் நேற்றிரவு தில்லியில் இருந்து
சிறப்பு விமானம்
மூலம் புறப்பட்ட
அவர்
தனது மனைவி ஜெயந்தியுடன் இன்று அதிகாலை
திருப்பதி சென்றார்
கோயில் நிர்வாகம்
சார்பில் அவருக்கு
சிறப்பான வரவேற்பு
அளிக்கப்பட்டது. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மாவட்ட
ஆட்சியர் உள்ளிட்டோர்
ஜனாதிபதியை வரவேற்றனர்.
0 comments:
Post a Comment