உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி
இங்கிலாந்து
– நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண்ணக்கிரிக்கெட்
போட்டியின் 9 வது லீக் ஆட்டம் வெலிங்டன்
வெஸ்ட்பேக் மைதானத்தில் நடைபெற்றது.
இதில்
நாணயச் சுழற்சியில்
வென்ற இங்கிலாந்து
அணி கேப்டன்
இயான் மோர்கன்
முதலில் துடுப்பாட்டத்தை
தேர்வு செய்தார். இதில் ‘ஏ’
பிரிவில் இடம்பெற்றுள்ள
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின
இங்கிலாந்து
அணி, நியூசிலாந்து
அணியின் பந்துவீச்சுக்கு
தாக்குப்பிடிக்க முடியாமல் 123 ஓட்டங்களுக்குள்
அனைத்து விக்கெட்டுகளையும்
இழந்தது. இங்கிலாந்து
தரப்பில் ஜோ
ரூட் மட்டுமே
அதிகபட்சமாக 46 ஓட்டங்கள் எடுத்தார். டிம் சவுத்தி
7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து
எளிய இலக்கை
விரட்டிய நியூசிலாந்து
அணி தொடக்க
முதலே அதிரடியாக
விளையாடியது. அந்த அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள்
மட்டுமே இழந்து
வெற்றிக்கான இலக்கை எட்டியது. நியூசிலாந்து தரப்பில்
கேப்டன் பிரண்டன்
மெக்குலம் அதிரடியாக
விளையாடி 25 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்தார். நியூசிலாந்து
அணி தொடக்க
ஆட்டத்தில் இலங்கையை 98 ஓட்டங்களில் வீழ்த்தியது. 2வது
போட்டியில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்தை 3 விக்கெட்
வித்தியாசத்தில் தோற்கடித்தது. தொடர்ந்து இன்றைய போட்டியில்
இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்து ஹாட்ரிக்
வெற்றியை ருசித்துள்ளது.
0 comments:
Post a Comment