ஆமை மீது ஏறி படம் பிடித்து
ஃபேஸ்புக்கில் வெளியிட்டதால் ஹைதராபாத்
வாலிபர் கைது
ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஃபசல் ஷேக் ஓர் ஆமை மீது ஏறி நின்று படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார்.
அதிக
லைக்ஸ் கிடைக்கும்
என்னும் ஆசையில்
ஹைதராபாத் உயிரியல்
பூங்காவில் அவர் ஆமையின் மீது ஏறி
எடுத்த படத்தை
ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். இந்தப் படத்தை
கண்ட உள்ளூர்
பத்திரிகை ஒன்று
ஃபேஸ்புக்கில் வெளியான வியப்பான பகிர்வு என்று
தலைப்பிட்டு, ஃபசல் ஷேக்கின் படத்தை வெளியிட்டது.
அந்தப்
பத்திரிகையில் வெளியாகியுள்ள படத்தைப் பார்த்த வனத்துறை
அதிகாரிகள், ஃபசல் ஷேக்கின் மீது புகார்
அளித்தனர், இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஃபசல்
ஷேக்கிடம் விசாரணை
நடத்தியதில் விளையாட்டு நோக்கத்தோடு படம் எடுத்து
ஃபேஸ்புக்கில் லைக்குகளுக்காக பகிரவே அப்படி செய்ததாக
கூறியுள்ளார். இதனையடுத்து அதிகாரி. ஃபசல் ஷேக்
மீது தடை
செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால் வனவிலங்கு
பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து
சிறையில் அடைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment