உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்து அணி 123 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு





இங்கிலாந்துநியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண்ணக்கிரிக்கெட் போட்டியின் 9வது லீக் ஆட்டம் வெலிங்டன் வெஸ்ட்பேக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. தொடக்க முதலே அந்த அணியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணமே இருந்தன.
இறுதியில் இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123  ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 46 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்களில் 96 ஓட்டங்களுடன் விளையாடுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top