உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
பாகிஸ்தான்
அணி பெரிதும் திணறிவருகிறது.
43 ஓவர்களில்
182/6
உலக
கோப்பை கிரிக்கெட்
போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான்
திணறி வருகிறது.
பிரிஸ்பேனில்
நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்
அணி, ஜிம்பாப்வேயை
(பி பிரிவு)
எதிர்கொண்டுள்ளது.. இந்த ஆட்டம்
பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டமாகும்.
தோல்வி விமர்சனத்தில்
இருந்து விடுபட
இந்த ஆட்டத்தில்
பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறது.
பாகிஸ்தான்
இன்றும் தனது
தொடக்க ஆட்டக்காரர்களை
ஒரு ஓட்டம்
மட்டும் எடுத்திருந்தநிலையில் இழந்தது. நாணயச்
சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்
செய்து விளையாடி
வருகிறது. பாகிஸ்தான்
அணியில் தொடக்க
ஆட்டக்காரர் நசீர் ஜாம்ஷெட் ஒரு ஓட்டத்திலும்,
ஷேசாத் ஓட்டம்
எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.
ஏற்கனவே இரண்டு
தோல்விகளால் பெரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ள
பாகிஸ்தான் ரசிகர்களை இது மேலும் எரிச்சல்
அடைய செய்துள்ளது.
43
ஓவர்களில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்களை
இழந்து 180 ஓட்டங்களை மட்டுமே
எடுத்திருந்தது. மிஷ்பா உல் ஹக் 69 ஓட்டங்களுடனும், வஹாப்
றியாஸ் 15 ஓட்டங்களுடனும் விளையாடி
களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான்
முதல் 10 ஓவர்களில்
வெறும் 14 ஓட்டங்களை
மட்டுமே எடுத்திருந்தது.
கடந்த 2001ம்
ஆண்டுக்கு பின்னர்
ஒருநாள் போட்டியில்
முதல் 10 ஓவர்களில்
பாகிஸ்தான் எடுத்த இரண்டாவது குறைந்த ஓட்டங்கள்
இதுவாகும். பாகிஸ்தான் அணி பெரிதும் திணறிவருகிறது.
0 comments:
Post a Comment