அபாயகரமான செயலை செய்ய வேண்டாம்
ஹுசைனிக்கு ஜெயலலிதா அறிவுரை

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்ற பிராத்தனைக்காக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே வீரர் ஹுசைனிக்கு, ஜெயலலிதா அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா, ஹுசைனிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இனியும் இதுபோன்ற அபாயகரமான செயலைச் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஹுசைனிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், "அன்புக்குரிய ஹுசைனி, தடைகளைத் தகர்த்து தமிழக முதல்வராக நான் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக சிலுவையில் அறைந்து கொள்ளும் வலி மிகுந்த காரியத்தைச் செய்துள்ளீர்கள். உங்கள் உற்சாகத்தைப் பாராட்டுகிறேன். அதே வேளையில் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும், என் நலன் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி. உங்கள் நலன் மீதும் அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்துகிறேன். இதுபோன்ற உயிருக்கு உலை வைக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.





ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல் வராக வரவேண்டும் என்பதற்காக கராத்தே வீரர் ஹுசைனி தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டு 7 நிமிடங்கள் இருந்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல் வராக வர வேண்டும் என்பதற்காக கராத்தே மற்றும் வில் வித்தை வீரர் ஹுசைனி தன்னைத் தானே சிலுவையில் அறைந்துகொள்ளும் பிரார்த்தனை நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா காலனியில் உள்ள வில் வித்தை பள்ளியில் நேற்று நடந்தது.
ஹுசைனி முதலில் 8 அடி உயரம், 6 அடி அகலம், 300 கிலோ எடை கொண்ட மர சிலுவையில் படுத்தார். இடது உள்ளங்கையில் சுமார் அரை அடி உயரம் கொண்ட ஆணியை வைத்து தன்னுடைய வலது கையால் சுத்தியை கொண்டு அடித்தார். வலது கை மற்றும் 2 கால்களிலும், அவருடைய மாண வர்கள் ஆணியை அடித்தனர். அதன் பின் ஹுசைனியை சிலுவையுடன் மாணவர்கள் தூக்கி நிறுத்தினர்.
பகல் 11.30 மணி முதல் 11.37 மணி வரை சிலுவையில் இருந்த படி ஹுசைனி பேசினார். அவர் கூறும்போது, “இளைஞர்கள் தம்மால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும். கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டை விட்டுவிட்டு, நம்முடைய வில் வித்தையை கற்க வேண்டும். ஒலிம் பிக்கில் வில் வித்தை போட்டியில் இளைஞர்கள் பதக்கம் வெல்ல வேண்டும். இதற்கு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும். அப்போதுதான் நாடு நன்றாக இருக்கும். நாடு எல்லா வளமும் பெற முடியும்என்று கூறினார். அதன்பின் சிலுவையில் இருந்து ஹுசைனியை இறக்கிய மாணவர்கள் உடனடியாக ஆம்பு லன்ஸில் ஏற்றிக்கொண்டு அடை யாறு ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிலுவையில் அறைவதற்கு முன்பு ஹுசைனியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களின்படி பிரார்த்தனை செய் யப்பட்டது. அதன்பின் சிலுவையில் அறைந்துகொள்ளும் பிரார்த்தனை நிகழ்ச்சி தொடங்கியது. சிலுவை யில் அறையப்பட்ட ஹுசைனியின் கைகள் மற்றும் கால்களில் இருந்து ரத்தம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ஒருவர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்துகொண்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top