ஆசிரிய சேவையில் 4 தசாப்தங்கள் சேவையாற்றிய
ஆசான் எம்.பீ.ஏ.ஹமீடு ஓய்வுபெற்றார்
41
வருடங்கள் சேவையாற்றிய சிரேஸ்ட கணித பாட ஆசிரியர் எம்.பீ.ஏ.ஹமீடு நேற்று (
25.2.2015 ) புதன்கிழமை தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
சாய்ந்தமருதை
பிறப்பிடமாகக் கொண்ட எம்.பீ.ஏ.ஹமீடு ஆசிரியர் முகைதீன்பாவா ஆதம்பாவா , அவ்வா உம்மா
தம்பதிகளின் 4வது புதல்வராக 26.02.1955 இல் பிறந்தார்.
தனது
ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மஹா வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை
கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியிலும்
கற்றார்.
க.பொ.த.உயர்தரப்
பரீட்சையை 1974 ஏப்ரலில் எழுதிய இவர் பரீட்சை முடிவடைந்தததும் ஆசிரியர் நியமனத்திற்காக
1.04.1974 இல் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றினார்.
இந்நேர்முகப்பரீட்சையில்
தெரிவு செய்யப்பட்டதால் 23.04.1974 இல் ஆசிரியர் நியமனம் கிடைக்கப்பெற்று ஆசிரியர்
சேவையில் இணைந்து கொண்டார்.
23.04.1974
இல் சம்மாந்துறை மகளிர் வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று ஒரு வருடம் அங்கு சேவையாற்றியதன்
பின்னர் 1975 , 1976 ஆகிய இரு வருடங்களிலும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்
சேவை புரிந்தார்.
1977
, 1978 ஆகிய ஆண்டுகளில் கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியில் சேவை புரிந்து 1979 ,
1980 காலப்பகுதியில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியிலும்
, கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியில் கற்பித்தல் பயிற்சியினையும் மேற்கொண்டு 1981 இல்
கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியில் ஒரு வருட கால கற்பித்தல் பயிற்சியிலும் ஈடுபட்டார்.
1.1.1982
இல் கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரியில் பயிற்றப்பட்ட கணிதப் பாட ஆசிரியராக இணைக்கப்பட்ட
இவர் இக்கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகவும் மதிக்கத்தக்க
ஒரு சிறந்த ஆசானாக 37 வருட காலம் சேவையாற்றியுள்ளார்.
இவரின்
41 வருட ஆசிரியர் சேவையில் 37 வருடங்கள் ஸாஹிறாக் கல்லூரியில் சேவையாற்றியுள்ளார். ஓய்வு பெற்ற ஹமீடு ஆசிரியரின்
சேவையினை பாராட்டி ஸாஹிறாக் கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் பிரதி
அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்விசாரா ஊழியர்கள் , பழைய மாணவர் சங்கம் மற்றும்
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியோர்கள் ஒன்றிணைந்து சேவைநலன் பாராட்டு விழா ஒன்றை
ஏற்பாடு செய்து அவரைக் கெளரவித்தனர்.
0 comments:
Post a Comment