சம்மாந்துறை........
இப்படியும் அறிவீர்களா....?
Muhammath Ranoos
தென்
கிழக்கிலங்கையின் முக வெற்றிலை...கல்முனைப் பட்டினத்துக்கும்
பொத்துவில் பாணமைப் பற்றின் ஈற்றுக்கும் இடையில்
கட்டுண்டு கிடக்கும்
தென் கிழக்கிலங்கையின்
உச்சி முடிதான்
சம்மாந்துறை.கண்டி இராச்சியத்தின் கீழ் புகழ்
பெற்ற துறைமுகமாக
விளங்கி தாவள
வியாபாரத்தின் தன்னிகரற்ற தளமாக விளங்கிய சம்மாந்துறை
சரித்திரத்தின் பக்கங்களில் இன்றும் மினுங்கிக் கொண்டிருக்கின்றது.
ஸ்ரீ
தலதா மாளிகையின்
தியவதனே நிலமே
ஐ தெரிவு
செய்வதற்கு நம் முன்னோரின் வாக்கும் தேவைப்
பட்டது என்ற
வரலாற்றுக் குறிப்பு நம் வரலாற்றின் முக்கிய
புள்ளியாகும்.இந்து சமுத்திரத்தின் முக்கிய கேந்திரமாகிய
இலங்கையின் அமைவிடம் புராதன காலத்திலிருந்தே இலங்கைக்கு
மிகப் பெரும்
வர்த்தகச் சிறப்பை
வழங்கி இருந்தது.அக்காலத்தில் இந்து
சமுத்திரப் பிராந்தியத்தின் வர்த்தகத்தில்
செல்வாக்குப் பெற்றிருந்த அரேபியர் தீவின் கிழக்குப்
கடல் பகுதியூடாக
வந்து மட்டக்களப்பு
வாவியினூடாக நுழைந்து இன்று சேறு படிந்து
தூர்ந்து போயுள்ள
கிட்டங்கி ஆற்றூடாக
நமது அல்லைப்
பகுதிக்கு வந்து
சம்மாந்துறை எம் மண்பதியை வந்தடைந்து அக்காலத்தில்
கண்டி ராஜ்ஜியத்தில்
புகழ் பூத்திருந்த
நமது ஆலடிச்
சந்தையில் முகாமிட்டு
மாட்டு வண்டியூடாக
கண்டி ராஜ்ஜியத்துக்கு
கம்பளி,பட்டு,வாசனைத்திரவியங்கள் போன்ற இன்னோரன்ன பொருட்களை அங்
பாறை (அம்பாறை)
ஊடாக ஊவா
வெல்லஸ்ஸ சென்று
தும்பறையூடாக கண்டிக்கு கொண்டு சென்றனர்.
அரபிகளுக்கும்
எங்களுக்குமான தொடர்பு இலங்கைக்கு அரேபியர் எப்போது
வந்தார்களோ அப்போதே ஆரம்பித்திருக்க வேண்டும் என்றே
அறியக் கிடைக்கின்றது.
வலுவான
உடற்கட்டும் மென்மையான மனமும் கொண்ட நமது
மூதாதையர்களின் பண்பாடும் வாழ்வியல் முறைகளும் நாம்
தேடிப்படிக்க வேண்டிய அளவு மிகப் பெறுமதியானதாகும்.துரதிஷ்ட வசமாக
இலங்கை முஸ்லிம்களின்
தொல்லியல் அடையாளங்கள்
பற்றி இன்னும்
சரியான முழுமயான
ஆய்வுகள் இடம்பெறவில்லை
என்றே நான்
கருதுகின்றேன்.
நமது
வரலாற்றை எழுதுவதில்
பல்வேறு சிக்கல்கள்
காணப்படுவது உண்மையே ஆயினும் நமது பூரணமான
வரலாற்றை எழுதுவதற்கு
நமது இளம்
ஆய்வாளர்கள் முன் வர வேண்டும்.
சம்மாந்துறைப்
பற்றின் பழைய
எல்லை அன்றைய
விந்தனைப் பற்று
என்று அழைக்கப்பட்ட
இன்றைய மகா
ஓயா ,பதியத்தலாவ
மற்றும் தெஹியத்த
கண்டிய என்பவற்றின்
எல்லைகள் வரை
நீண்டிருந்தது என்றால் நம்புவீர்களா..?
நமது
முன்னோர்களின் மாடுகள் மேய்வதற்க்கான மேய்ச்சல் தரைகள்
இவ்வெல்லைப் பகுதிகளிலே அமைந்திருந்தது என்றால் நம்புவீர்களா...?
கல்லோயா
அபிவிருத்தித்திட்டம் நடை முறைக்கு
வருவதற்கு பல
நூறு ஆண்டுகளுக்கு
முன்னே நமது
முன்னோர்கள் கொண்ட வட்டுவான் குளத்திலிருந்து தடை
(தடை) கட்டி
தண்ணீர் கொண்டு
வந்து விவசாயம்
செய்ததை அறிவீர்களா?
நாம்
மருத நிலம்
கொண்ட விவசாயம்
சமூகம் என
பெயர் பெற்றாலும்
வளமான காட்டு
வளம் கொண்ட
ஒரு முல்லை
நிலச் சமூகம்
என்பதை அறிவீர்களா?
அப்படியானால்
நமது காட்டு
வளம் எங்கே
தொலைந்தது...?எப்படி தொலைந்தது...?யார் தொலைத்தது...?யார் கொள்ளை
கொண்டார்கள்...?இந்த வினாக்களுக்கான விடையினை அறிவீர்களா...?
நமது
மென்மையான இரக்க
சுபாவத்தினை பாவித்து நம்மை யார் யார்
எல்லாம் ஏமாற்றினார்கள்
என்பதை அறிவீர்களா....?
அம்பாறை
பிரதேசத்தின் வனங்களுக்குள்ளே நமது மூதாதையரின் பிரசவங்களும்,தாலாட்டுக்களும்,கிராமியக்
கவிகளும்,அவர்
தம் சோறும்
கறியும் இன்னும்
ஜீவிப்பதாக எனக்கு உணர்கின்றேன்...
காலவோட்டத்தில்
நமது மக்களின்
வாழ்வியல் முறைகளில்
ஏற்பட்ட மாற்றங்களால்
குறிப்பாக கல்லோயா
அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் ஏற்பட்ட விவசாயப்
புரட்சியினால் நாம் நமது நிலங்களைப் பண்படுத்தி
விவசாயம்seithu முழு நெற்ற விவசாயி ஆக
மாறி நாம்
எம்மூரின் இன்றிருக்கும்
எல்லைகளுக்குள் முடக்கப்பட்டோம்......
இன்று
நமக்கு திகவாபியில்
எல்லைப் பிரச்சினை,வளத்தாப்பிட்டியில் எல்லைப் பிரச்சினை,முறிகண்டி வீரைச்சோலை
யில் எல்லைப்
பிரச்சினை .........நமது பாரம்பரிய
வரலாற்று இருப்பு
இருந்த பிரதேசங்களில்
நமக்கே எல்லை
காட்டுகின்றார்கள்.......இதற்க்கு என்ன
காரணம் என்பதை
அறிவீர்களா...?
பாரிய
விவசாய நிலப்
பரப்பைக் கொண்ட
நாம் நமது
விவசாயத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களை கொண்டிருக்கின்றோமா....?
விளைந்தும்
விளையாமல் பத்திப்
பதறி காயும்
கதிருமாய் வெட்டி
ஏலக்காய் பருவத்தில்
சாக்கில் கட்டி
பொலன்னருவைக்கும் இன்னும் பிரதேசங்களுக்கும் நான் நீ
என்று போட்டி
போட்டு கடனுக்கும்
காசுக்கும் நெல் ஏற்றி சில வேளைகளில்
காசும் கிடைக்காது
ஏமாந்து .......இப்படி அல்லல் படும் நாம்
நமக்காக மிகப்
பிரம்மாண்டமான ஒரு நெல் உலர்த்தும் ஆலை
மற்றும் நெல்
குற்றும் ஆலை
ஒன்றினையாவது அமைத்திருக்கின்றோமா...?
நெல்
புரோகர் வேலை
பார்ப்பதற்கு மட்டும் பழகி இருக்கின்றோம்......
ஐம்பது
வருட காலம்
நமது பாராளுமன்றப்
பிரதி நிதித்துவத்தை
தக்க வைத்த
நாம் இன்று
எல்லாக்கட்சிகளுக்கும் எல்லா வேட்பாளர்களுக்கும்
வாக்களித்து நமது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை காவு கொடுத்துக் கொண்டிருக்கின்றோமே.........அறிவீர்களா காரணம்
என்னவென்று........?
கல்விமான்கள்
நிறைந்த உஊராகக்
காணப்பட்ட நாம்
இன்று பல்வேறு
துறைகளில் துறை
சார்ந்த விற்பன்னர்களை
உருவாக்காமளிருக்கின்றோம் என்பதை அறிவீர்களா....?
மாகாணக்
கல்விப்பணிப்பாளர் யூ.எல்.அலியார்,உயர்
நீதிமன்ற நீதி
அரசர் கௌரவ
அமீர் இஸ்மாயில்,கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் பட்டதாரி அப்துல்
மஜீத்,இலங்கை
முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் அரசியல் அடையாளம்
தந்த தலைவர்
சட்ட முதுமாணி
ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.எச்
.எம் அஷ்ரப்
,குர் ஆனியக்
அடிப்படை நூல்
தந்த ஓ.எம்.பாஷி
ஆலிம்,கவிதை
இலக்கியத்தில் பாவலர் பஷில் காரியப்பர்,ஈழ
மேகம் பக்கீர்த்தம்பி,
இப்படி
சட்டம்,அரசியல்,கல்வி,ஆன்மீகம்,இலக்கியம்.......பல நூறு
பேரை கூறலாம்
......இன்று நமது நிலை எப்படி என்று
அறிவீர்களா....?
ஊர்க்கட்டுப்பாட்டில்
எல்லா மஸ்ஜித்
களையும் ஒரு
நிர்வாகத்தின் கீழ் நிர்வாகிக்கும் ஒரு நம்பிக்கையாளர்
பரிபாலன முறையினைக்
கொண்டு வந்து
முழு இலங்கைக்கும்
ஒற்றுமைக்கு உதாரணமாகி நின்ற நாம் இன்று
நமக்குள்ளே பொதுவான கருத்தில்லாது நமது சுயநலன்களுக்காக
நம்மை நாமே
நியாயப் படுத்திக்
கொண்டு திரிவதை
அறிவீர்களா.......?
விருந்தோம்பலிலும்
பரோபகாரத்திலும் தலை சிறந்து விளங்கிய நாம்
இன்று நமது
ஊரை முன்னேற்றும்
பொதுவான சமூக
நலத்திட்டங்கள் இன்றி பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறிவீர்களா...?
இந்த
மாவட்டத்தின் மிகப் பெரும் தனித்த வங்கியாகவும்
பாரிய நிலப்பரப்பும்
கொண்ட நாம்
கடந்த ஒரு
தசாப்தத்துக்கும் மேலாக ஒரு பாராளுமன்ற உறுப்புரிமையைப்
பெற முடியாமல்
வழி வகுக்கும்
வகையில் இன்று
வரை மடத்தனமாக
சிந்தித்துக் கொண்டிருப்பதை அறிவீர்களா...?
நாம்
விழித்துக் கொண்டிருக்கும் போதே நமது ஊரின்
வளங்கள் காவு
கொள்ளப் பட்டுக்
கொண்டிருப்பதை அறிவீர்களா...?
நமக்குள்ளே
நாம் சிறுபிள்ளைத்தனமாக
விமர்சித்துக் கொண்டு திரிவதை ஆரோக்கியமானது என்று
கூறு புத்தி
ஜீவிகளும்......உள்ளார்கள் என்பதை அறிவீர்களா......?
நமது
படித்தவர்களும் புத்திஜீவிகளும் நமது மக்களின் வறுமையையும்
அவர்களது வாழ்வியலில்
மாற்றத்தை ஏற்படுத்தவும்
திராணியில்லாது சோம்பேறிகளாக தூங்கி வருவதை அறிவீர்களா?
இது
நமது மண்......இதனை வளப்
படுத்த நாமே
முன் வர
வேண்டும்........அப்படி இல்லாவிடின் நான் சுட்டுவது
போன்று.......இன்னும் வரப்போகும் நமது தலை
முறைகள் நம்மையும்
நோக்கி விரலை
நீட்டலாம்.......நம்மையும் நிறுத்தி கேள்வி கேட்கலாம்......அல்லது நாமும்
அழிந்து நமது
சந்ததியும் அழிந்து கேள்வி கேட்கக் கூட
இயலாத நிலைமையும்
வரலாம்......ந ஊது பில்லாஹி மின்ஹா.....
0 comments:
Post a Comment