உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
இலங்கை அணி
9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி (படங்கள்)
புள்ளி விபரப் பட்டியல் இணைப்பு
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து -இலங்கை அணிகள் வெலிங்டனில்
இன்று1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மோதின. இப்போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி
பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில்
6 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி
47.2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு
312 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
LAHIRU THIRIMANNE லாஹிறு திரிமன்னே 143 பந்துகளை
எதிர்நோக்கி 2 சிக்ஸர்கள் 13 பவுண்டரிகள் அடங்களாக 139 ஓட்டங்களையும், KUMAR
SANGAKKARA குமார் சங்கக்கார 86 பந்துகளை எதிர்நோக்கி 2 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள்
அடங்களாக 117 ஓட்டங்களையும், TILLAKARATNE DILSHAN தில்சான் திலகரத்ன 55 பந்துகளை எதிர்நோக்கி
2 சிக்ஸர்கள் 04 பவுண்டரிகள் அடங்களாக 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளிடம் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து, தனது 3-ஆவது
ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வென்றது. மறுபுறம், இலங்கை அணியோ
தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி வென்றது. ஆனால்,
3-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
0 comments:
Post a Comment