கிழக்கு மாகாண
முதலமைச்சர் விவகாரத்தில்
ஏன் தமிழ் தேசியத் தலைமைகள்
தாறுமாறாகவும், காட்டமாகவும் பேசி வருகின்றன?
-
முஸ்லிம் கங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கேள்வி!
கிழக்கு
மாகாண முதலமைச்சர்
விவகாரத்தில் நாங்கள் விட்டுக் கொடுக்க விரும்பி
இருக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி
வைக்க வேண்டும்.
இதன்
பின்னணியில் ஏன் தமிழ் தேசியத் தலைமைகள்
தாறுமாறாகவும், காட்டமாகவும் பேசி வருகின்றன? நட்புறவோடு
நாங்கள் நடந்து
கொள்கின்ற பொழுது,
மிகவும் பக்குவமாக
வார்த்தைகளைப் பயன்படுத்துகின்ற பொழுது தமிழ் தேசியத்
தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப்
பிரயோகங்கள் ஏதோவோர் ஆற்றாமையின் காரணமாகத் தான்
காட்டமாக இருப்பதாகத்
தெரிகிறது.
இவ்வாறு,
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும்,
நகர அபிவிருத்தி
நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப்
ஹக்கீம் கூறினார்.
எதிர்வரும்
பெப்ரவரி 28ஆம் திகதி நடைபெறவுள்ள முல்லைத்தீவு
மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை
ஆதரித்து இடம்பெயர்ந்த
வாக்காளர்கள் மத்தியில் ஆலங்குடா ‘பீ’ முகாம்
என்ற கிராமத்தில்
திங்கட்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரக்
கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடமேல்
மாகாண சபை
உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ்,
முன்னாள் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
உச்சபீட உறுப்பனர்
நஜாத் உட்பட
காரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும்
கட்சியின் வேட்பாளர்களும்
பொதுமக்களும், வாக்காளர்களும் இக்கூட்டத்தில்
கலந்து கொண்டனர்.
முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ஹக்கீம்
மேலும் தெரிவித்ததாவது.
சமகாலத்தில்
சுவாரஸ்யமான சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தினரான
முஸ்லிம்கள் பற்றிய பிரஸ்தாபம் குறித்து எமது
மக்கள் மிகவும்
ஆதங்கத்தோடு இருக்கின்றனர்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் தனது முதலாவது
உத்தியோக விஜயத்தை
மேற்கொண்டிருக்கின்றார். அவரும் இந்தியப்
பிரதமர் மோடியும்
சந்தித்துக் கொள்கின்றார்கள்.
இவ்வாறான
சூழ்நிலையில் பலவிதமான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில்
துளிர்விட ஆரம்பித்திருக்கின்றது.
இரண்டு நாடுகளுக்குமான
இருதரப்பு பிரச்சினைகளுக்கான
தீர்வு மாத்திரமல்ல,
இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களின்
பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பது குறித்து
விஷயங்களும் பேசப்படலாம் என நம்பப்படுகின்றது.
ஆனால்,
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் ஓர்
அரசியல் இயக்கமென்ற
அடிப்படையில் அண்மைக்காலமாக, நடந்து வருகின்ற சில
விஷயங்களைப் பற்றி எங்களுக்கே வியப்பாக இருக்கின்றது.
எதற்காக
இவ்வாறு நாங்கள்
விமர்சிக்கப்படுகின்றோம்? ஏன் தமிழ்
தேசியத் தலைமைகள்
கொஞ்சம் தாறுமாறாகக்
காட்டமாக பேசி
வருகின்றன என்பதில்
எனக்கு இன்னும்
சரியாக தெளிவில்லை.
இவ்வளவு
நட்புறவோடு நாங்கள் நடந்து கொள்கின்ற பொழுது,
மிகவும் பக்குவமாக
வார்த்தைகளைப் பயன்படுத்துகின்ற போது தமிழ் தேசியத்
தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப்
பிரயோகங்கள் என்பன ஏதோவோர் ஆற்றாமையின் காரணமாக
காட்டமாக இருக்கின்றன
என்ற கவலை
எங்களுக்கு உள்ளது. அவை ஆற்றாமையின் வெளிப்பாடாக
இருக்கலாம் என எங்களை நாங்களே சமாளித்துக்
கொள்கின்றோம்.
ஏன்
அந்த ஆற்றாமை
ஏற்பட்டது என்பதற்கு
அவர்களிடத்திலே தான் விளக்கம் கோர வேண்டும்.
குறிப்பாக அண்மையில்
எழுந்த கிழக்கு
மாகாண முதலமைச்சர்
விவகாரத்தில், முஸ்லிம் காங்கிரஸ் அந்த முதலமைச்சர்
பதவியை பெற்றிருக்கின்றது
என்ற நிலையில்,
தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் ஒரு கூட்டுக் கட்சியின் தலைவரான
நண்பர் சுரேஷ்
பிரேமச்சந்திரன் காட்டமாக ஒன்றைச் சொல்லியிருப்பதை இன்றும்
கூட நான்
பார்த்தேன்.
அண்ணன்
சம்பந்தன் கூட
வழக்கமாக அவரது
உரைகளில் காணப்படும்
தமிழ்-முஸ்லிம்
உறவு குறித்த
அம்சங்களை குறித்து,
மிக காட்டமான,
விமர்சன ரீதியான
கருத்துக்களை முன்வைப்பது குறித்து நாம் வேறெதுவுமல்ல,
வேதனையடைகின்றோம்.
இந்த
விரிசல் வேண்டுமென்றே
ஏதாவது அரசியல்
காரணங்களுக்காக ஏற்படுத்தப்படுகின்றதா? அடுத்து
வரும் தேர்தலை
மையமாக வைத்து
தமிழ் மக்களின்
வாக்குகளை இலக்கு
வைத்து இவ்வாறு
பேசுகின்றனரா? என்று யோசித்தாலும் கூட அவ்வாறு
அவர்கள் நடந்து
கொள்வதனால் என்ன நன்மை கிடைக்கப்போகின்றது என்று எங்களுக்குப் புரியவில்லை.
முதலமைச்சர்
விவகாரத்தில் இவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டு
விட்டதா? முதலமைச்சர்
விவகாரத்தில் நாங்கள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை
என்பதை நான்
மிகத் தெளிவாகச்
சொல்ல வேண்டும்.
சில
நியாயங்களை நாங்கள் பேச வேண்டும். வெறும்
அறிக்கை விடுவதில்
பயனில்லை. அவர்கள்
விடும் அறிக்கைளுக்கு
மாற்று அறிக்கை
விடுவதைக் கூட
நான் தவிர்த்துக்
கொண்டு வருகின்றேன்.
முல்லைத்தீவு
கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தல் நடைபெறவுள்ள
நிலையில் அந்த
மண்ணைச் சேர்ந்த
உங்கள் மத்தியில்
நான் இதனைக்
கூற வேண்டும்.
தமிழ்
தேசியக் கூட்டமைப்போடு
முட்டி மோதிக்
கொண்டு அரசியல்
செய்ய நாங்கள்
விரும்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, கிழக்கு
மாகாணத்திலும், கண்டி, கொழும் மாவட்டத்திலும் வாழும்
முஸ்லிம்களுக்காக மட்டும் பேசுகின்ற தலைமையொன்றல்ல. முல்லைத்தீவு
போன்ற பிரதேசங்களில்
வாழும் மக்களையும்
மனதில் கொண்டு
தான் நான்
பேச வேண்டும்.
எனவே, எனது
வார்த்தைகளில் பக்குவம் பேணப்பட வேண்டும். நேர்மையும்
தூர நோக்கும்,
சாணக்கியமும் இருக்க வேண்டும்.
ஆனால்,
இவை எவையுமே
இன்று தமிழ்
தேசிக் கூட்டமைப்பினரின்
பேச்சுக்களில் தென்படவில்லை என்றுதான் நான் இன்று
இந்த விஷயத்தை
நோக்குகின்றேன்.
ஏனென்றால்,
இந்த கரைதுறைப்பற்று
தேர்தலை எடுத்தாலும்,
இதற்கு முன்னர்
நடந்த வட
மாகாண சபைத்
தேர்தலை எடுத்தாலும்,
பூநகரி பிரதேச
சபைக்கான தேர்தலை
எடுத்தாலும் மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்திருந்து அமைச்சுப்
பதவிகளை அனுபவித்தோம்
என்பதைக் குத்திக்
காட்டிப் பேசுகின்ற
தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் தலைமைகள், அந்த அரசாங்கத்தில் இருந்து
கொண்டு நாங்கள்
இரண்டறக் கலக்காது
தனித்துப் போட்டியிட்டதன்
உள் நோக்கம்
என்ன என்பதை
புரிந்து கொள்ள
வேண்டும்.
மஹிந்த
அரசின் வற்புறுத்தல்களுக்கு
அடிபணியாமல் தொடர்ந்தும் எமது தனித்துவத்தை தக்க
வைத்துக் கொண்டு
போராடினோம் என்பதை குறைந்த பட்சம் அவர்களும்
புரிந்து கொள்ள
வேண்டும்.
எங்களுக்கு
கிளிநொச்சி, பூநகரியில் போய் தேர்தல் கேட்க
வேண்டிய அவசியமே
இருக்க வில்லை.
ஆயிரத்துக்கு சற்று மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களில்
எத்தனை பேர்
வாக்களிக்க முன்வந்தார்களோ தெரியாது.
எங்களது
கட்சிக்கு நூற்றி
ஐம்பத்தெட்டு வாக்குகள் கிடைத்த காரணத்தினால் தமிழ்
தேசியக் கூட்டமைப்பு
அந்த பூநகரி
பிரதேச சபையைக்
கைப்பற்றியது. இல்லையென்றால், மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிலைச்
சின்னம் பூநகரியை
வென்றிருக்கும்.
அதனால்,
அமைச்சரவையிலும் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ மிகவும்
கோபத்தோடு என்னைச்
சுட்டிக் காட்டி
காட்டமாக விமர்சித்துப்
பேசினார். நாங்கள்
பூநகரியில் தனித்துக் களமிறங்கப்போய் மஹிந்தவினதும், சகபாடிகளினதும்
கடும் கோபத்திற்கு
நான் ஆளானேன்.
நாங்கள்
தனித்துவம் பேணியதால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்
அடைந்த நன்மைகளைப்
பற்றியும் அவர்கள்
அறிந்து கொள்ள
வேண்டும். எங்களுக்கு
பூநரியில் ஒரு
ஆசனம் கிடைக்குமென்ற
நப்பாசையில் நாங்கள் அங்கு போட்டியிட முன்வரவில்லை.
தமிழ்
பேசும் மக்களின்
பூமியை தமிழ்
பேசும் மக்களின்
தனித்துவமான அரசியல் இயக்கங்கள் ஆள வேண்டும்
என்பதில் முஸ்லிம்
காங்கிரஸுக்கு ஒரு தனியான கொள்கை இருக்கின்றது.
எங்களை சோரம்
போனவர்களாக பார்க்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
தலைமைகள், நாங்கள்
அமைச்சுப் பதவிகளுக்கு
சோரம் போன
கூட்டத்தினரல்ல, அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்து
விட்டு வந்த
கூட்டத்தினர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதனால் ஆட்சிகளை
மாற்றிக் காட்டியிருக்கின்றோம்.
இந்த
நாட்டின் சுதந்திரத்திற்குப்
பின்னரான அரசியல்
வரலாற்றில் அமைச்சர் ஒருவர் மூன்று முறை
பதவியை விட்டு
வெளியேறியதை காட்ட முடியுமா என நான்
கேட்கின்றேன். இதைப்பற்றி நான் தமிழ் பேசும்
தலைமைகளஜடம் கேட்க விரும்புகின்றேன்.
அவர்கள்
எங்களை கடிந்து
பேசுகின்றார்கள் என்பதற்காக நான் அவ்வாறு நடந்து
கொள்ள விரும்பவில்லை.
எங்களது
அரசியல் நேர்மையென்பது
முக்கியமானது. நீங்கள் நினைக்கின்ற மாதிரி நாங்கள்
முடிவெடுக்க வேண்டும் என்பதும் பிழையான விஷயமாகும்.
முஸ்லிம் காங்கிரஸின்
அரசியலை முஸ்லிம்
சமூகத்தின் இருப்பையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கு எந்த
முடிவை மேற்கொள்ள
வேண்டும். என்பதை
தலைமை தான்
தீர்மானிக்க வேண்டும். எமது மக்கள் தான்
தீர்மானிக்க வேண்டும். நீங்கள் இழுக்கின்ற பக்கம்
எல்லாம் நாங்கள்போக
வேண்டும் என்ற
ஒரு நியதி
கிடையாது.
நாங்கள்
தவறான முடிவெடுத்திருக்கலாம்
அந்த தவறை
நினைத்து நாங்கள்
வருந்தியிருக்கலாம். கிழக்கு மாகாண
சபை முடிவுற்ற
தறுவாயில் அந்த
முடிவை எடுப்பதற்கு
சில நியாயங்கள்
இருந்தன. அதிகாரத்தைக்
கண்டு எங்களில்
சிலர் அள்ளுண்டு
சோரம் போகின்ற
நிலைமை இருந்தது.
சமுர்த்தி
நியமனம் மற்றும்
வேறு அதிகாரங்கள்
என்று பின்னால்
போனவர்கள் எதுவுமே
கிடைக்காமல் ஏமாந்து போய் எங்களோடு மீண்டும்
வந்து இணைந்து
கொண்டிருக்கின்றார்கள். அவ்வப்போது சிலருக்கு
தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறான தடுமாற்றங்களிலிருந்து இந்த முழு இயக்கத்தையும் பாதுகாக்க
வேண்டுமென்ற சவாலுக்கு நான் அடிக்கடி உட்படுகின்றேன்.
தமிழ்
தேசியக் கூட்டமைப்பு
அடையப் போகின்ற
வெற்றிக்கு குறுக்காக நிற்பதற்கு நாங்கள் விரும்பவில்லை.
வடக்கில் தேர்தலை
நடாத்த கூடாது
என்று ராஜபக்ஷ
அரசாங்கம் என்னென்னவெல்லாமோ
செய்யப்பார்தது. அதற்காக அமைச்சரவைக்குள் மஹிந்த ராஜபக்ஷவோடு
ஏறத்தாழ ஒன்றை
மணித்தியாலங்கள் நான் வாதாடியிக்கின்றேன்.
ஜோர்தானுக்குப்
போயிருந்த நான்
உடனடியாக நாடுதிரும்பி,
விமான நிலையத்திலிருந்து
நேராக அமைச்சரவைக்
கூட்டத்திற்குச் சென்று 13வது சட்டதிருத்தத்தை இல்லாமல்
செய்வதற்கு அரசாங்கம் கொண்டு வந்த அமைச்சரவபை;
பத்திரத்தை எதிர்த்து ஒன்றை மணி நேரம்
வாதாடியிருக்கின்றேன்.
மஹிந்த
ராஜபக்ஷவும் நானும் மாறி மாறி ஒன்றை மணி
நேரம் வாதாடியிருக்கின்றோம்
அந்த வாரத்தில்
வெளிவந்த எல்லாப்
பத்திரிகைகளிலும் அதனைப் பிரசுரித்திருந்தார்கள்.
தமிழ்
தேசியக் கூட்டமைப்பின்
அரசியல் வெற்றிக்குக்
குறுக்கே நின்று
மஹிந்த ராஜபக்ஷவின்
அரசாங்கத்திற்குச் சாமரம் வீச
வேண்டுமென்று நாம் அவரது அரசாங்கத்தில் சேரவில்லை.
அவரது
அரசாங்கத்தில் இருந்து கொண்டு நங்கள் தனித்துவமாக
போட்டியிடுவோம் என பிடிவாதமாக இருந்த காரணத்தினால்
பூநரியில் மட்டுமல்ல,
மன்னார் மாவட்டத்திலும்
சில பிரதேச
சபைகளில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பு
வெற்றி பெறுவதற்கு
நாங்கள் காரணமாக
இருந்தோம் மஹிந்த
ராஜபக்ஷவிடம் எங்களைக் காட்டிக் கொடுத்தவர்களும் இப்பொழுது
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகியுள்ள அரசாங்கத்தோடு இருக்கின்றார்கள்.
முதலமைச்சர்
பதவிக்காலத்தின் முதல் பகுதியை ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின்
நஜீப் ஏ.
மஜீதிற்கு கொடுத்து
விட்டு, எங்களது
பங்கை அனுபவிப்பதற்கான
கட்டம் வந்த
போது தான்
ஆட்சி மாற்றம்
ஏற்பட்டது.
இந்தக்
கட்டத்தில் எங்களுக்கு கிடைக்க இருந்த முதலமைச்சர்
பதவியைப் பறித்துத்
தங்களுக்குத் தர வேண்டும் என தமிழ்
தேசியக் கூட்டமைப்பினர்
பிடிவாதமாக இருந்தனர்.
கிழக்கின்
முதலமைச்சர் பதவியின் இரண்டாவது பகுதியை எங்களுக்கு
தருவதாக உடன்பாடு
காணப்பட்ட போது
தாமும் உடனிருந்ததாக
நினைவுபடுத்தி எங்களுக்கு அதனைத் தருவதற்கு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன பெருமனதுடன் முன்வந்ததற்கு நாங்கள்
அவருக்கு நன்றி
செலுத்துகின்றோம். நாங்கள் கிழக்கு
மாகாண சபையில்
கூடுதலான உறுப்பினர்கள்
எங்களோடு இருப்பதை
ஆளுநருக்கு ஒப்புவித்துச் சத்தியப் பிரமாணஞ் செய்து
கொண்டோம்.
தமிழ்
தேசியக் கூட்டமைப்பினருடன்
ஓர் இணக்கப்பாட்டைக்
காண்பதற்கு அவர்களுடன் மூன்று, நான்கு தடவைகள்
கதைத்தோம் அவர்களது
பிடிவாதப் போக்கில்
எந்த விதமான
தளர்வும் இல்லாத
நிலையில், இறுதியில்
நாங்கள் முதலமைச்சர்
நியமனம் பற்றி
முடிவெடுத்த போது அவர்களது மாகாண சபை
உறுப்பினர்கள் கூட எங்களோடு உடன்பாடு காண
வந்தார்கள். அதையும் இப்பொழுது தலைமையின் அங்கீகாரமின்றி
நடந்ததாக அவர்கள்
கூறலாம்.
ஆனால்
எங்களைப் பொறுத்தவரை
தலைமையின் அங்கீகாரத்துடன்
தான் எல்லாம்
நடக்கின்றன என்ற நம்பிக்கையில் அவர்களோடு நாங்கள்
சில உடன்பாடுகளுக்கு
வந்தோம்.
உடன்பாடுகளை
நாம் நிச்சயமாக
கௌரவிப்போம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்க
வேண்டிய அமைச்சுப்
பதவிகளைக் கொடுத்து,
கிழக்கில் எமது
தலைமையில் ஒரு
தேசிய அரசாங்கம்
அமைந்தது என்ற
பெருமையை நிலைநாட்டுவோம்.
இன்னும்
பக்குவம் தவறி
எடுத்தெறிந்து பேசுகின்ற நிலைமை தொடர்வது மிகவும்
வேதனைக்குரியது.
ஏனென்றால்
அண்ணன் சம்பந்தன்
மூத்த அரசியல்வாதி
அவரோடு என்னை
ஒப்பிடுவது மலைக்கும், மடுவுக்குமுள்ள வித்தியாசம். அவரிடமிருந்து
படிக்க வேண்டியவை
நிறை உள்ளன.
அவரை நான்
நொந்து கொள்ள
விரும்பவில்லை.
நான்
அவரை விமர்சிப்பதன்
மூலம் என்னை
நான் உயர்த்திக்
கொள்ள முடியும்
என்றும் நான்
நினைக்கவில்லை. அந்த மூத்த அரசியல் தலைமைக்கு
முழுமையாக மதிப்பளிக்க
நான் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த
நிலையில் அண்ணன்
சம்பந்தனை எங்களது
குருவாகத்தான் நான் பார்க்கின்றேன்.
இந்த
இடத்தில் மஹாபாரதத்தில்
வருகின்ற ஓர்
உதாரணத்தைக் கூறிக் காட்ட விரும்புகின்றேன். இந்த முதலமைச்சர் பதவியை அண்ணன்
சம்பந்தன் தங்களுக்கு
தர வேண்டுமெனக்
கேட்பதை மஹாபாரதத்தில்
வருகின்ற ஒரு
சம்பவத்தோடு ஒப்பிட்டுக் காட்ட நான் விரும்புகின்றேன்.
அது அவ்வளவு
தூரம் எங்களது
கட்சியையும், அரசியலையும் பாதிக்கும் என்கின்ற நிலையிலேயே
இதனைக்கூறுகின்றேன்.
அது
என்ன சம்பவம்
என்றால், மஹாபாரதத்தில்
ஏகலைவனின் குரு
துரோணரைப்பற்றி அதனைப் படித்தவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
தனது பயிற்சியை
வில் வித்தையில்
தனது சிஷ்யனான
ஏகலைவனுக்கு வழங்கிய துரோணாச்சாரியார் ஏகலைவனிடம் கேட்டது
வேறெதையுமல்ல, ‘உனது கட்டை விரலை வெட்டித்
தா?’ என்று
கேட்கிறார். கட்டை விரலை வெட்டினால் வில்
வித்தையில் ஏகலைவனால் நீடிக்க முடியாது. அவ்வாறு
துரோணாச்சாரியார் கட்டை விரலை ஏகலைவனிடம்; கேட்டதற்குச்
சமமாகத்தான் முதலமைச்சர் பதவியை அண்ணன் சம்பந்தன்
கேட்கின்றார் என்ற அளவிற்கு எங்களது உணர்வுகள்
இருந்தன.
முஸ்லிம்
காங்கிரஸின் அரசியலில் இந்தக் கட்டத்தில் முதலமைச்சர்
பதவியை நாங்கள்
கிழக்கில் பறிகொடுத்திருந்தால்
எவ்வளவு தூரம்
பாதிக்கப்பட்டிருப்போம். அது எங்களுக்கு
வாக்களித்த மக்களும், எங்களுக்கு எதிராக இயங்குகின்றவர்களும்
எங்களைத் தூற்றுவதற்கு
வாய்ப்பாகப் போய்விடும்.
அரசியலில்
மூத்தவராக இருப்பதால்
அண்ணன் சம்பந்தனை
நான் குருவாகப்
பார்க்கின்றேன். வில் வித்தை கற்றுக் கொடுத்து
விட்டு கட்டை
விரலை கேட்பது
போலத்தான் அண்ணன்
சம்பந்தன், இந்தச் சந்தர்ப்பத்தில் கிழக்கின் முதலமைச்சர்
பதவியை கேட்பது
அமைகின்றது.
இதற்கப்பால்,
தமிழ் தேசியக்
கூட்டமைப்பினருடன் நீண்ட, நெடிய
பயணத்தை நாங்கள்
தொடர வேண்டியிருக்கின்றது.
கரைத்துறைபற்று
பிரதேச சபைத்
தேர்தலில் முஸ்லிம்
காங்கிரஸ் உறுப்பினர்கள்
இருவரை வென்றெடுக்கும்
வாய்ப்பு உள்ளது.
துரதிஷ்டவசமாக இந்தத் தேர்தலுக்கான வாக்காளர் இடாப்பு
2014 ஆண்டுக்குரியது என்ற காரணத்தினால்
பதிவு செய்யப்பட்ட
முஸ்லிம் வாக்காளர்
எண்ணிக்கையில் குறைவு காணப்படுவதால் இந்த நிலைமைக்கு
முகம் கொடுக்க
நேர்ந்திருக்கின்றது. அல்லாது விட்டால்
இன்னும் உறுப்பினர்களை
பெற முடியும்.
முல்லைத்தீவு
முஸ்லிம்கள் தனித்துவமான வாழ்வியலைக் கொண்டவர்கள். போர்ச்
சூழலில் வெகுவாகப்
பாதிக்கப்பட்டவர்கள். துன்ப, துயரங்களுக்கு
மத்தியில் வாழ்ந்து
வருபவர்கள். இவர்களது வாழ்வாதாரத்திலும்,
இவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் மாற்றங்களையும்,
அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து விதமான
முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
0 comments:
Post a Comment