முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சி இணைந்து

பொதுத் தேர்தலில் போட்டியிடுமேயானால்

வாக்களிக்கப்போவதில்லை

-    ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் ஆதரவாளர்கள் தெரிவிப்பு




எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியியுடன் இணைந்து போட்டியிடும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தினால் தெரிவிக்கப்பட்டிருப்பதை அடுத்தே ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆதரவாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எங்களின் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு தமது  பிரதிநிதிகளை தெரிவு செய்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகிய எங்களைத் தள்ளி வைத்துவிடுகின்றார்கள். இது கடந்த காலங்களில் நாங்கள் பெற்ற அனுபவங்களாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகிய நாங்கள் பல வருடங்களாக அரசியல் பழிவாக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்கப் பெறல் வேண்டும்.
எங்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு வேறு ஒரு கட்சியினரால் பாதிக்கப்பட்ட எங்களை  மீண்டும் புறந்தள்ள அனுமதிக்கக்கூடாது.
முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரமல்ல பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல் கேட்டு அதன் மூலம் கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஆசனங்களையும் எடுத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கே துரோகம் செய்தவர்கள்.
இப்படிப்பட்டவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து போட்டியிடுமாக இருந்தால்  ஐக்கிய தேசியக் கட்சியையும் முஸ்லிம் காங்கிரஸையும் தவிர்த்து   ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகிய நாங்கள் வேறு கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது சம்மந்தமாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களை விரைவில் சந்திக்கவும் தீர்மானித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top