மலர்ந்துள்ள
2016ம் ஆண்டு உங்களுக்கும் எங்களுக்கும்
ஓய்வற்றதொரு ஆண்டாக அமைய உள்ளது
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
எண்ணற்ற
எதிர்பார்ப்புகள் நம் எதிரே சுடர்விட்டு எரிந்து
கொண்டிருக்கின்றன. நாம் கடந்த
ஜனவரியில் எங்களுடையதும்
எமது பரம்பரையினரதும்
வாழ்வினை புதியதொரு
திருப்புமுனைக்கு இட்டுச்சென்ற ஒரு முக்கியமான பிரவேசத்தின்
ஊடாக மிகவும்
பலம்வாய்ந்த, நிலைபேறான நோக்கத்துடன் முன்னோக்கிய பயணத்தை
துரிதப்படுத்தப்பட வேண்டிய ஒரு
முக்கிய தடையினை
தாண்டவேண்டியதொரு கட்டத்தை நாம் இன்று கழிக்கின்றோம்.
கடந்த
ஜனவரி முதலாம்
திகதி நான்
உங்களுக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்திய
ஜனநாயக சுதந்திரம்,
ஊழல் மற்றும்
அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி, நல்லிணக்கம்
ஆகியவற்றைப் போன்றே இல்லாதொழிக்கப்பட்டிருந்த
சர்வதேசத்தின நல்லெண்ணம் என்பவற்றை மீண்டும் ஏற்படுத்தி
சாதகமான விளைவுகளை
நாம் இன்று
அனுபவிப்பது கடந்த ஜனவரி மாதத்தில் நாம்
கொண்ட இலட்சியத்தின்
பயனாகும்.
அன்று
நீங்கள் என்மீது
கொண்ட நம்பிக்கையினைப்
பாதுகாத்து உங்களிடம் நான் வழங்கிய வாக்குறுதிகளை
நிறைவேற்றி வெற்றிவாகை சூடியதொரு ஆண்டாக 2015ம்
ஆண்டினை மாற்றினேன்.
மலர்ந்துள்ள
2016ம் ஆண்டு
உங்களுக்கும் எங்களுக்கும் ஓய்வற்றதொரு ஆண்டாக அமைய
உள்ளது. 22 மில்லியன் மக்களின் எதிர்காலத்திற்காக நாம் ஆரம்பித்த பாரிய வேலைத்திட்டத்தின்
ஊடாக ஈடு
இணையற்ற ஓர்
பயணத்தை நாம்
ஆரம்பித்துள்ளோம்.
எமது
நன்நோக்கங்கள் போன்றே குரோதமற்ற சிந்தனைகளும் அதிகாரத்தை
அடைந்து கொள்வதற்கு
பதிலாக அதிகாரத்தை
விட்டுக்கொடுத்து மக்களை வலுவடையச் செய்யும் பணியுடன்
நாம் இலங்கையின்
அரசியல் வடிவத்தினை
முற்றுமுழுதாக மாற்றியமைத்தோம். இவையனைத்தும்
மலர்ந்துள்ள புத்தாண்டின் நிகழ்ச்சிநிரலுடன்
தொடர்புடையதாக காணப்படுகின்றது.
அன்று
நம்மத்தியில் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கைப்பிணைப்பு,
கூட்டு ஒத்துழைப்பு
ஆகியவற்றை முன்னோக்கி
நகர்த்துவதன் ஊடாகவே வெற்றியின் ஒட்டுமொத்த பயனை
அடைந்துகொள்ள முடியும்.
எனவே
புத்தாண்டின் எமது பொது நோக்கமாக ஒற்றுமை
மற்றும் அதனூடாக
வலுவடையும் கூட்டு ஒத்துழைப்பினையும் சகவாழ்வினையும் பாதுகாப்பதே
எமது இலட்சியமாக
அமைதல் வேண்டும்.
குறித்த
இலட்சியத்துடன் பிரார்த்தனைகள் நிறைவேறும் புத்தாண்டில் காலடி
எடுத்துவைக்கும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மலர்ந்துள்ள இப்புத்தாண்டு
சௌபாக்கியமான ஆண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-
மைத்ரிபால சிறிசேன
0 comments:
Post a Comment