நாடாளுமன்ற சபாநாயகர் கருஜயசூரியவுடன்
முன்னாள் அமைச்சர் மன்சூர்
மகள் சட்டத்தரணி மர்யம் நளீம்தீன் ஆகியோர் சந்திப்பு
நாடாளுமன்ற சபாநாயகர் கருஜயசூரிய அவர்களின் விஷேட அழைப்பின் பேரில் முன்னாள்
வர்த்தக், வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களும் அவரது மகள் சட்டத்தரணி மர்யம்
நளீம்தீன் அவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
சபாநாயகருடனான இச் சந்திப்பின்போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
துரைரட்ணசிங்கம் அவர்களும் கல்ந்து கொண்டிருந்தார்.
சபாநாயகர் கருஜயசூரிய ,முன்னாள் அமைச்சர் மன்சூர், அவருடைய மகள்
சட்டத்தரணி மர்யம் நளீம்தீன் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின்போது
சமகால அரசியல் கடந்தகால அரசியல் அனுபவங்களை நினைவுகூர்ந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள்
பரிமாறப்பட்டன.
இலங்கைத் திருநாடு இறைவனால் நேசிக்கப்படுகின்ற ஒரு நாடு. அதனால்தான்
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால கட்டத்தில் எமது இலங்கை நாடாளுமன்றம் அறிவும்,அனுபவமும்
இலங்கை மக்கள் சகலரினதும் நம்பிக்கையும் நன்மதிப்பும் பெற்ற கருஜயசூரிய அவர்களை நாடாளுமன்ற சபாநாயகராகவும், பொலனறுவையில் விவசாயக் குடும்பத்தைச்
சேர்ந்த அரசியலில் சாணக்கியம் பெற்ற எளிமையான
நற்குணம் படைத்த மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாகவும் இலங்கை அரசியலில் காத்திரமான
ஒரு அரசியல் தலைவராக உள்ள ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரதம மந்திரியாகவும் கொண்டிருப்பது
எல்லாம் வல்ல இறைவனின் திருப் பொருத்தமே என்று முன்னாள் அமைச்சர் மன்சூர் இங்கு குறிப்பிட்டார்.
சபாநாயகர் கருஜயசூரிய அவர்கள் முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களின்
நெருங்கிய குடும்ப நண்பர் என்ற ரீதியில் சபாநாயகருடனான இச் சந்திப்பின்போது மன்சூர் அவர்களின் மகள் சட்டத்தரணி மர்யம் நளீம்தீன் அவர்களிடம் அவுஸ்திரேலியாவில்
அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சட்டத்தொழில் பற்றி கரிசனையாக விசாரித்து அறிந்து
கொண்டார்.
அவுஸ்திரேலியா நாட்டில் தொழில் கட்சி (LABOR PARTY) அரசியலுடனான
சட்டத்தரணி மர்யம் நளீம்தீன் அவர்களின் ஈடுபாடும் அக்கட்சின் விக்டோரியா மாநிலத்திற்கான
சுகாதார அமைச்சர் ஜில் ஹென்னசி
உடனான நெருங்கிய தொடர்புகள் குறித்தும்
கேட்டறிந்த சபாநாயகர் மகிழ்வடைந்ததோடு மாத்திரமல்லாமல் சிறப்பாக சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களின் மகள் சட்டத்தரணி மர்யம் நளீம்தீன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால கட்டத்தில் இலங்கை அரசியலில் இருக்க
வேண்டிய ஒருவர் என்று குறிப்பிட்டதுடன்
மர்யம் நளீம்தீன் போன்ற திறமைமிக்க இளம் சட்டத்தரணிகள் தாய் நாடான இலங்கை நாட்டை விட்டு
வெளியே அவுஸ்திரேலிய நாட்டில் வாழ்வதையிட்டு கவலை தெரிவித்தார்.
எமது தாய் நாடான இலங்கையுடனும்
தனது கட்சியுடனும் எப்பொழுதும் எச்சந்தர்ப்பத்திலும் தொடர்புடன் இருக்கும்படியும் இலங்கை
மக்களின் நன்மைகளிலும், தீமைகளிலும் எப்பொழுதும்
பங்கு கொண்ட ஒருவராக இருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் கருஜயசூரிய அவர்கள் சட்டத்தரணி
மர்யம் நளீம்தீன் அவர்களிடம் வேண்டிக் கொண்டார்.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா
மாநில பாராளுமன்ற சபாநாயகர் தெல்மோலங்குயிலர் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கான விஜயத்தை
மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment