மெக்சிகோவில் புதிதாக பதவியேற்ற
பெண் மேயர் சுட்டுக்கொலை

ஜனவரி முதலாம் திகதி புத்தாண்டு தினத்தன்று டெமிக்ஸ்கோ நகரின் புதிய மேயராக பதவியேற்றுகொண்ட கிஸெலா மோட்டாவை இன்று அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நான்கு மர்மநபர்கள் சுட்டுக் கொன்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மெக்சிகோவில் இருந்து தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் டெமிக்ஸ்கோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இங்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் இடதுசாரி இயக்கமான குடியரசு புரட்சிக் கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளரான கிஸெலா மோட்டா வெற்றி பெற்றார்.
புத்தாண்டு தினத்தன்று டெமிக்ஸ்கோ நகரின் புதிய மேயராக பதவியேற்றுகொண்ட இவரை இன்று அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நான்கு மர்மநபர்கள் சுட்டுக் கொன்றனர். கொலையாளிகளில் இருவரை சுட்டுக் கொன்ற பொலிஸார், தப்பியோடிய இரு கொலையாளிகளை கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கான பின்னணி மற்றும் நோக்கம் தொடர்பாக பொலிஸார் விசாரித்து வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் சுயாட்சி உரிமை பெற்ற மெக்சிகோ மாநிலம் உலகம் முழுவதிலும் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு தலைமைச் செயலகமாக விளங்கி வருகின்றது. போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையில் தினந்தோறும் இங்கு வெட்டுக்குத்து சண்டைகளும், துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் இவைசார்ந்த மரணங்களும் தொடர்கதையாக நடந்து வருகின்றது.
போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் மெக்சிகோவில் கடந்த ஆண்டில் இதுபோல் பல மேயர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top