ரஜினி முருகன் - என்னமா இப்படி பண்றீங்களேம்மா?

என கேட்க வைக்கிறதாம் சிறப்பில்லாத சிரிப்பு படமாம்!

ஒரு சினிமா ரசிகரின் கண்ணோட்டம்!


கதை பற்றி கவலையில்லை. கலகல என்று இருக்க வேண்டும். நகைச்சுவை மட்டுமே போதும் என நினைத்தால் நீங்கள் 'ரஜினி முருகன்'  திரைப்படத்தைப் பார்க்கலாம்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வெற்றியால், அதே கூட்டணியில் உருவான படம், சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியில் வெளியாகும் ஐந்தாவது படம் என்ற இந்த காரணங்களே 'ரஜினி முருகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
'ரஜினி முருகன்' எப்படி?
கதை: தன் பேரன் சிவகார்த்திகேயன் செட்டில் ஆவதற்காக பரம்பரை வீடு விற்கலாம் என்று முடிவெடுக்கிறார் தாத்தா ராஜ்கிரண். அது நடந்தால் காதலியைக் கரம் பிடிக்கலாம் என்று நினைக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால், அதில் ஒரு வில்லங்கம் எட்டிப் பார்க்கிறது. வில்லங்கம் என்ன ஆனது? வீடு விற்கப்பட்டதா? சிவகார்த்திகேயன் செட்டில் ஆனாரா? காதல் கைகூடியதா? என்பது மீதிக் கதை.
இயக்குநர் பொன் ராம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போலவே இன்னொரு படம் கொடுத்துவிட நினைத்திருக்கிறார். ஆனால், அது முழுமையாக இல்லை என்பதுதான் நிதர்சனம்.
சிவகார்த்திகேயன் தனக்குரிய கதாபாத்திரத்தை சரியாக செய்கிறார். ஆனால், படம் முழுக்க ஒரு வித அடக்க உணர்வுடனே நடித்திருப்பது ஏன்? என்று தெரியவில்லை.
வசனங்களுக்கு இடையில் கேப்பில் கெடா வெட்டும் அளவுக்கு கவுன்ட்டர் கொடுக்கும் சூரிக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. சூரிக்கு இது முக்கியமான படமும் கூட. அதிக ரசிகர்கள் சூரியைக் கொண்டாடுகிறார்கள்.
ஹோட்டல் மேனேஜர் 'ஹலோ' சொல்லி கை குலுக்க வரும்போது 'டைம் இல்லை' என சொல்வது, 'சரக்கு அடிச்சிட்டு தகராறு பண்றியா' என கீர்த்தி கேட்கும்போது 'சர்பத் குடிச்சிட்டா பேசுவாங்க' என சொல்வது, 'உன்னை எங்கேயே பார்த்த மாதிரி இருக்கே?' என சிவகார்த்திகேயன் கேட்கும்போது போன படத்துல பார்த்திருப்ப? என்ற சூரியின் வசனங்களுக்காக ரசிகர்களால் தியேட்டர் தெறிக்கிறது.
ஆனால், கதை என்ற ஒன்றை மட்டும்தான் படத்தில் தேடிப் பார்த்தாலும் கிடைக்கவே இல்லை. அதுவும் கீர்த்தியின் அப்பா தொடர்பான பிளாஷ்பேக், சிவகார்த்திகேயன் - ராஜ்கிரண் போடும் நாடகம் எல்லாம் சின்ன புள்ளத்தனமாக இருக்கிறது.
திரைக்கதையில் அழுத்தமோ, சுவாரஸ்யமோ இல்லாமல் தேமே என்று நகர்கிறது. பொன் ராம் திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
பாலசுப்பிரமணியெத்தின் ஒளிப்பதிவும், இமான் இசையும் படத்துக்கு பலம். விவேக் ஹர்ஷன் இன்னும் சில இடங்களிலும், பாடலிலும் கத்தரி போட்டிருக்கலாம்.
ராஜ்கிரண் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் பேரு மாஸா தான் இருக்கு. படம்? என்னமா இப்படி பண்றீங்களேம்மா? என கேட்க வைக்கிறது.

கதை பற்றி கவலையில்லை. கலகல என்று இருக்க வேண்டும். நகைச்சுவை மட்டுமே போதும் என நினைத்தால் நீங்கள் 'ரஜினி முருகன்' பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top