சாய்ந்தமருது பீச் பார்க்கின்அவல நிலை குறித்து
கல்முனை மாநகர சபையின் கண்கானிப்பில் உள்ள சாய்ந்தமருது பீச் பார்க் குப்பைகளும் மிருகங்களால் இடப்படும் கழிவுகளும் நிறைந்து அசிங்கமான ஒரு நிலையில் காணப்படுவதாக பொது மக்களால் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டாக்காலி நாய்கள்,ஆடுகள், மாடுகள் ஓய்வு எடுக்கும் இடமாகவும்
இந்த பீச் பார்க் மாறியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறு குழந்தைகள், பிள்ளைகள் ஓடி விளையாடுவதற்கென பெரும் தொகைப்
பணம் செலவிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இப் பீச் பார்க் சிறு வயதினரின் சுகாதாரத்திற்கு
பங்கம் விளைவிக்கும் இடமாகக் காட்சி தருவதாகவும் கல்முனை மாநகர சபையால் இது விடயம்
கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டது போன்று காணப்படுவதாகவும் இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கல்முனை மாநகர சபையிலுள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துப்பரவு
செய்யும் ஊழியர்களை ஒரு ஒழுங்கு முறையில் நாளாந்தம் அனுப்பி இப் பீச் பார்க்கில் உள்ள
குப்பைகள், அசிங்கங்கள் என்பவற்றை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா?
எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment