பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்
இலங்கை விஜயத்தின்போது




அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பின்பேரில் பாகிஸ்தான் பிரதமர் அதிமேதகு நவாஸ் ஷெரீப் அவர்கள் 2016 சனவரி 04 ஆந் திகதியிலிருந்து 06 ஆந் திகதிவரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்களும் பேகம் கல்சூம் ஷெரீப் அம்மையார் அவர்களும் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் வரவேற்கப்பட்டார். 2016 ஜனவரி 05ஆந் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழ் உத்தியோகபூர்வ வரவேற்பு வைபவம் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடாத்தப்படும். வருகை தரும் பிரதமருக்கு துப்பாக்கி வேட்டு வரவேற்பையும், கௌரவ பாதுகாப்பு அணிவகுப்பையும் உள்ளடக்கி ஓர் வைபவ ரீதியான வரவேற்பு வழங்கப்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் விஜயம் செய்யும் பிரதமருடன்  நடாத்தப்படவுள்ள உத்தியோகபூர்வ இருதரப்புக் கலந்துரையாடல்களுக்குத் தலைமை தாங்குவார். உரையாடல்களை மேற்கொள்ளும் பேராளர்குழு மாண்புமிகு பிரதமரையும்அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களையும், சிரேஷ்ட அரசாங்க உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கியிருக்கும். வருகை புரியும் பிரதமருக்கு  கௌரவம் அளிக்கும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச விருந்துபசாரம் ஒன்றை வழங்குவாரென்பதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவருக்கு மதியபோசன விருந்தொன்றை வழங்குவார்.
சுகாதாரம், விஞ்ஞானமும் தொழினுட்பவியலும், வியாபாரம், புள்ளிவிபரவியல், இரத்தினங்களும் ஆபரணங்களும், கறுப்புப் பணப் பறிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் அத்துடன் காலாசாரம் ஆகிய துறைகளில் அநேக இருதரப்பு உடன்படிக்கைகள் இவ்விஜயத்தின் போது கையொப்பமிடப்படுமென முன்னாடியாகக் கருதப்படுகிறது. சருவதேசத் தொடர்புகள் மற்றும் திறமுறை ஆய்வுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் அழைப்பின் பேரில் பிரதம அமைச்சர் நவாஸ் ஷெரீப் அவர்கள் சினமன் லேக்-சைட் ஹோட்டலில் இலங்கை பாகிஸ்தான்தொடர்புகள் மீது ஓர் விசேட விரிவுரையை நிகழ்த்துவார்.
இலங்கையில் தங்கியிருக்கும் போது பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்கள் வரலாற்று புகழ்மிக்க கண்டி மாநகருக்கும் விஜயம் செய்வார். அவர் புனித தந்தம் இருக்கும் இடத்திற்கும் விஜயம் செய்வார் என்பதுடன் கண்டியில் ஓர் முஸ்லிம் பள்ளிவாசலுக்கும், ஜின்னா நிலையத்திற்கும் கூட விஜயம் செய்வார். அவர் பேராதனை தாவரப் பூங்காவிற்கு விஜயம் செய்து இலங்கைக்கான தமது விஜயத்திற்கான ஞாபகார்த்தமாக கரந்த”  (​Pongamia Pinnata) தாவரமொன்றை நடுகை செய்வார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஏப்ரல் 0507 ஆந் திகதிவரை பாகிஸ்தானுக்கு ஓர் இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டமை நினைவு கூரப்படுகின்றது. பிரதமர் நவாஸ் ஷெரீப் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக 2013 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை புரிந்துள்ளதுடன் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜனாதிபதியாகிய ஆசிப் அலி சர்தாரி இலங்கைக்கு இராஜாங்க விஜயம் ஒன்றைப் மேற்கொண்டார். 



பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் விமான நிலையத்தில் அவர் வரவேற்கப்படும் காட்சி



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top