கல்முனை ஜாமிஆ  மன்பயில் ஹிதாயா அரபுக்கல்லுாரியின்

10வது மௌலவி ஆலிம் மன்பஈ பட்டமளிப்பு விழா

(எஸ்.அஷ்ரப்கான்)



கல்முனை ஜாமிஆ  மன்பயில் ஹிதாயா அரபுக்கல்லுாரியின் 10வது மௌலவி ஆலிம் மன்பஈ பட்டமளிப்பு விழா  எதிர்வரும் 25 ஆம் திகதி புதன் கிழமை கல்முனை கடற்கரை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அரபுக்கல்லுாரியின் அதிபர் மெளலவி பாஸில், மழாஹரி எஸ்.முஹம்மட் அலி  அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளதாக கல்லுாரியின் விரிவுரையாளர் மௌலவி எம்.எஸ்..எம். அப்துர் றஹீம் தெரிவித்தார்.
ல்முனை ஜாமிஆ  மன்பயில் ஹிதாயா அரபுக்கல்லுாரியின் 25 வது ஆண்டு  நிறைவு விழா 10வது மௌலவி ஆலிம் பட்டமளிப்பு மற்றும் 3வது ஆண்டு அல்-ஹாபிழ் பட்டமளிப்பு ஆகிய முப்பெரும் விழா இங்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக இந்திய கேவை இம்தாதுல் உலும் அரபிக் கல்லுாரி அதிபர் ரீ.எம். அமானுள்ளாஹ் ஆலிம் நுாரி அவர்களும், பிரதம அதிதிகளாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, தபால் மற்றும் முஸ்லிம் சமய, கலாச்சார அமைச்சர் எம்.எச்.. ஹலீம் அகியோரும், கௌவ அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  எச்.எம்.எம். ஹரீஸ், பிரதி அமைச்சர் டுலிப் விஜேசேகர ஆகியோரும் மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள் அரபு மத்ரஸாக்களின் அதிபர்கள் உலமாக்கள் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்வில் 10வது மௌலவி ஆலிம் மன்பஈ பட்டத்தினை 11 மௌலவிமார்களும், 3வது ஆண்டு அல்-ஹாபிழ் பட்டத்தினை 3 மாணவர்களும், 11 வது தலைப்பாகை சூடும்  9 மாணவர்களும் கௌரவிக்கப்பட உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top