ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேன மே 14-இல்
இந்தியாவுக்கு விஜயம்


ஜனாதிபதி மைத்ரிபால சிறீசே, எதிர்வரும் வரும் 14-ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்கின்றார் என அறிவிக்கப்படுகின்றது.
இது குறித்து  இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராய்சேன் மாவட்டம், சாஞ்சி நகரில் உள்ள பௌத்த மத நினைவுச் சின்னங்களைக் காண்பதற்காகவும், அங்கு வழிபாடு மேற்கொள்ளவும் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா வரும் 14-ஆம் திகதி வருகிறார்.

அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிப்பதற்காக, மாநில அரசின் தலைமைச் செயலர் அந்தோணி தேசாவும், காவல்துறைத் தலைவர் சுரேந்திர சிங்கும் நேற்று சாஞ்சி நகர் சென்று பார்வையிட்டனர் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top