ரயிலில் டிக்கட் இன்றி ஓசியில் பயணிப்போருக்கு
20,000 ரூபா அபராதம்!
பயண நுழைவுச்சீட்டு இன்றி ரயிலில்
பயணம் செய்யும்
பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்துவது குறித்து
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்
அமைச்சு கவனம்
செலுத்தி வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி,
ரயிலில் டிக்கட்
இன்றி பயணிப்போருக்கு
20,000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து கவனம்
செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது
5000 ரூபாவாக காணப்படும் அபராதத் தொகையை 20,000 ரூபாவாக
உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாள் தோறும்
டிக்கட் இன்றி
ரயிலில் பயணம்
செய்யும் பயணிகளின்
எண்ணிக்கை உயர்வடைந்து
செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால்
அபராதத் தொகையை
உயர்த்த தீர்மானித்துள்ளதாக
போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி
சில்வா, அரசாங்க
சிங்களப் பத்திரிகையொன்றுக்குத்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment