வெல்லம்பிட்டி, சேதவத்தை பிரதேசங்களில்
200 பேர் வெள்ளத்தில் சிக்கித்தவிப்பதாக அறிவிப்பு
வெல்லம்பிட்டிப்
பிரதேசத்தில் சுமார் 200 பேர் வெள்ளத்தில் சிக்கித்
தத்தளித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
களனி
ஆற்றில் திடீரென்று
நீர் மட்டம்
உயர்ந்த காரணத்தினால்
சேதவத்தை, வெல்லம்பிட்டிய, கொலன்னாவையில் தாழ்ந்த பகுதிகல் உள்ளிட்ட பிரதேசங்களில் ஆறு
அடிக்கும் அதிகமான
நீர் புகுந்துள்ளது.
இதன்
காரணமாக நேற்றைய
தினம் மாடி
வீடுகளில் தூங்கிக்
கொண்டிருந்தவர்கள் எதிர்பாராத விதமாக
வெள்ளத்தினுள் சிக்கி தவித்துக்கொண்டுள்ளனர்.
சுமார்
200 பேர் இவ்வாறு
சிக்கித் தத்தளித்துக்
கொண்டிருப்பதாக தற்போது அறியக்கிடைத்துள்ளது.
இரண்டாவது நாளாக
அவர்கள் வெள்ளத்தில்
சிக்கித் தவித்துக்
கொண்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கும், உணவுப் பொதிகள்
வழங்கவும் யாரும்
முன்வரவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில்
வெள்ளநீருக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள்
அடிக்கடி தங்கள்
உறவினர்களைத் தொடர்பு கொண்டு தங்களை மீட்பதற்கு
உடனடி நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள வெல்லம்பிட்டி பிரதேசத்திற்குள் பொதுமக்கள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment