வெல்லம்பிட்டி பிரதேசத்தின்
தற்போதய நிலவரம்
வெல்லம்பிட்டி பிரதேசத்திற்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டி பிரதேசத்திற்கு நாம் இன்று 19 ஆம்
திகதி பிற்பகல் நேரடியாகச் சென்ற போது சின்னப்பாலம் உள்ள பகுதிக்கு யாரும் செல்ல முடியாத
நிலை காணப்பட்டது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை படகுகள்
மூலம் அழைத்து வந்து கொண்டிருந்தார்கள். இவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு
அம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் இருந்து கொண்டிருந்தன.
அப்பிரதேசத்தில் குடியிருந்த மக்கள்
வீதியில் நின்று கொண்டிருப்பதையே காணக்கூடியதாக இருந்தது. பல குடும்பங்கள் அரச பாடசாலைகளில்
தங்கியுள்ளார்கள்.
வெல்லம்பிட்டி பொலிஸ்
நிலயத்திற்கு அப்பால் எதுவித போக்கு வரத்தும் செய்யமுடியாது. சின்னப்பாலம் உள்ள பகுதி முற்றாக நீரில்
மூழ்கியுள்ளது.
பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர்
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள வெல்லம்பிட்டி பிரதேசத்திற்குள் பொதுமக்கள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில அமைப்பினர்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.











0 comments:
Post a Comment