நாளை 23ம் திகதி திங்கட்கிழமை
அரச ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை
நாளை
23 ஆம்
திகதி திங்கள்கிழமை அரச
சேவையாளர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லையென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.
அரச
பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படுமென கல்வியமைச்சு
அறிவித்துள்ளது.
அத்தோடு
அனர்த்த பாதிப்புக்கள்
ஏற்படும் பிரதேசங்களில்
சில இடங்களுக்கு
மாத்திரம் வலய
கல்விப் பணிப்பாளர்களின்
அனுமதியுடன் விடுமுறை அளிப்பதற்கு அதிபர்களுக்கு அதிகாரம்
அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
சனி
மற்றும் ஞாயிறு
தினங்களில் வெசக் போய தினத்தை முன்னிட்டு
திங்கட்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது
குறித்து அரசாங்கம்
பரீசீலனை செய்திருந்தது.
எனினும்
தற்போது எதிர்பாராத
வகையில் ஏற்பட்டுள்ள
இயற்கைச் சீற்றம்
காரணமான அனர்த்த
காலநிலையைக் கருத்திற்கொண்டு திங்கட்கிழமை
அரச ஊழியர்களுக்கு
விடுமுறை வழங்கும்
முடிவை அரசாங்கம்
ரத்துச் செய்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
அசாதாரண
காலநிலைச் சீற்றத்தினால்
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும்
வகையில் இந்த
முடிவை அரசாங்கம்
மேற்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment