நிவாரண உதவிகளை வழங்குவோருக்கு
RCC யிடமிருந்து அவசர வேண்டுகோள்
தொடர் மழை மற்றும, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய முறையில் நிவாரணங்களை வழங்கவும், பெற்றுக் கொடுக்கவும் நோக்குடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா, தேசிய ஷூறா சபை மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் உட்பட ஏனைய சிவில் அமைப்புக்களையும் ஒன்றினைத்து நிவாரண பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் (Relief Coordinating Center – RCC) ஒன்றை ஸ்தாபித்தாபிக்கப்பட்டுள்ளது.
நிவாரண பணிகளை முன்னெடுப்பது, பொருட்களை திரட்டுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவது, தேவையான வழிகாட்டல்களை மேற்கொள்வது, அரச இயந்திரத்தின் முழுமையான சேவைகளை பெற்றுக் கொடுப்பது உட்பட்ட சகல நடவடிக்கைகளையும் ஆர் .சி. சி. அமைப்பின் ஊடாக முன்னெடுப்பதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கும் ஆர். சி;. சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று இன்று 22 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பாக பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
ஆர். சி. சி என்ற இந்த அமைப்பு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அங்கீகாரத்துடன் இப்பணிகளை முன்னெடுக்கின்றது. இதன் மூலம் உரியவர்களுக்கு உதவிகள் முறையாக கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.
எனவே, நிவாரண உதவிகளை வழங்குவோர் ஆர். சி. சி அமைப்பின் ஊடாக வழங்க முன் வருமாறு வேண்டுகின்றோம்.
இவ்வாறான ஒன்றிணைந்த ஒர் அமைப்பின் தேவை கடந்த காலங்களில் வெகுவாக உணரப்பட்டது. இதனை பலப்படுத்துவது காலத்தின் தேவையாக இருப்பதனால் அது குறித்து விஷேட அக்கரைகாட்டுமாறு சகலரிடமும் இந்த அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களை தவறாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுப்படுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த ஒன்றிணைந்த அமைப்பின் ஊடாக பணம் மற்றும், பொருட்களை வழங்குதே சிறந்த வழியாக அமையும்.
இதேவேளை, அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அனேகமான முஸ்லிம்கள் தனது உறவினர்களினதும் நண்பர்களினதும் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். இவர்களில் அனேகர் தம் பெயர் விபரங்களை இதுவரை பதிவு செய்யவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன. மீள்குடியேற்றம் மற்றும் அரசின் உதவிகளை உரிய முறையில் பெறுவதற்கு பதிவு செய்வது மிகவும் முக்கியமானது என்பதால் பாதிக்கப்பட்ட சகலரும் தாம் தற்பொழுது தற்காலிகமாக தங்கியுள்ள பிரதேச பள்ளிவாசல்கள் மூலமாவோ அல்லது ஆர். சி. சி அமைப்புடன் தொடர்பு கொண்டோ பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எனவே, நிவாரண உதவிகள் தேவைப்படுவபர்களும் உதவிகளை வழங்க தயாராக உள்ளவர்களும் மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்களும் RCC யின் 0117490415 என்ற அவசர இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்
.
RCC
- Sri Lanka
ஆர். சி. சி. பிரதான ஒருங்கிணைப்பாளர்கள் : (RCC –
Coordinators)
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா : அஷ்ஷெய்க் முர்ஷித் முழப்பர்
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனம் : அல்ஹாஜ் அஸ்லம் உதுமான்
நிவாரண பொருட்கள் – அல்ஹாஜ் ஏ. எல் ஹக்கீம்
தகவல் திரட்டல் ; – அஷ்ஷெய்க் முஹம்மது பாஹிம், டாக்டர் அலி சஜா
சமூக வலைத்தளம் – அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸிர்
ஊடக நிலையம்:
நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையம்
0 comments:
Post a Comment