தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில்

28 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு


ஜெயலலிதா தலைமையில் புதிதாக அமைக்கப்படவுள்ள தமிழ் நாடு சட்டப் பேரவை அமைச்சரவையில் இடம்பெறவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை நேற்று சனிக்கிழமை வெளியிட்டது. முன்னதாக, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்கான கடிதத்தையும், புதிய அமைச்சர்களின் பட்டியலையும்  ஜெயலலிதா அளித்தார். இந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது.
 இதன்படி, முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்களும் நாளை  திங்கள்கிழமை பதவியேற்கின்றனர்.
 இவர்களில் 13 பேர் புதுமுகங்கள்:
 கடம்பூர் சி.ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், வி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், .எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.துரைக்கண்ணு, பி.பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, எம்.மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 13 புதுமுகங்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.
 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு:
 14-ஆவது சட்டப் பேரவையில் அமைச்சர்களாக இருந்த .பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, செல்லூர் கே.ராஜு, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி ஆகிய 12 பேர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
 முன்னாள் அமைச்சர்கள்: கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 3 பேர் அமைச்சர்களாகவுள்ளனர்.
 3 பேர் பெண்கள்: வி.சரோஜா (ராசிபுரம்), எஸ்.வளர்மதி (ஸ்ரீரங்கம்), வி.எம்.ராஜலட்சுமி (சங்கரன்கோவில்) ஆகிய 3 பெண்கள் அமைச்சர்களாகவுள்ளனர். 14-ஆவது சட்டப் பேரவையில் அதிமுக அமைச்சரவையில் இரண்டு பெண் அமைச்சர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 தமிழகத்தின் 15-ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டப் பேரவையின் அதிமுக குழுத் தலைவராக ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதா, 28 அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில்  நாளை திங்கள்கிழமை (மே 23) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
7 அமைச்சர்களுக்கு அதே துறைகள் ஒதுக்கீடு கடந்த பேரவையில் அமைச்சர்களாக இருந்த 7 பேருக்கு அவர்கள் வகித்த அதே துறைகளே புதிய 15-ஆவது சட்டப்பேரவையிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 நிதித் துறை அமைச்சர் .பன்னீர்செல்வம், சுகாதாரம்-குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உணவு-இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு அதே துறைகள் இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி
 கே.பழனிசாமிக்கு, அந்தத் துறையுடன் கூடுதலாக பொதுப்பணித் துறையும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சரான செல்லூர் கே.ராஜுவுக்கு, தொழிலாளர் நலத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

28 தமிழக அமைச்சர்களின் சுய விவரம்
.பன்னீர்செல்வம்
 வயது : 65
 படிப்பு : பி..,
 ஊர் : பெரியகுளம்
 குடும்பம் : மனைவி விஜயலட்சுமி,
 மகன்கள்: ரவீந்திரநாத்குமார்,
 ஜெயபிரதீப், மகள்: கவிதா
 பதவிகள்: 1996 முதல் 2001வரை பெரியகுளம் நகர்மன்றத் தலைவர், 2001இல் வருவாய் துறை அமைச்சர்,2001 முதல் 2002 வரை முதல்வர், 2002 முதல் 2006 பொதுப் பணித்துறை மற்றும் கலால் துறை அமைச்சர், 2006 முதல் 2011 எதிர்க்கட்சித் துணைத் தலைவர், 2011முதல் 2014 வரை நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர், 2014 முதல் 2015 முதல்வர்,
 2015 முதல் 2016 நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர். தற்போது போடிநாயக்கனூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு மீண்டும் நிதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சி. சீனிவாசன்
 வயது : 68
 படிப்பு : எம்..
 ஊர் : ஆர்.எம். காலனி, திண்டுக்கல்.
 பதவிகள்: 1972 முதல் அதிமுக உறுப்பினர், ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட விவசாயப்பிரிவு செயலர், திணடுக்கல் மாவட்டச் செயலர், மாநிலப் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவராக உள்ளார்.
 பதவி: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு தற்போது வனத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி .பழனிச்சாமி
 வயது : 62
 படிப்பு : பி.எஸ்.சி
 ஊர் : எடப்பாடி அருகே உள்ள
 சிலுவம்பாளையம்.
 குடும்பம் : மனைவி ராதா, மகன்
 பி.மிதுன்குமார்.
 பதவிகள்: ஆரம்பம் காலம் முதலே அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். 1989, 1991, 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். பின்னர் 1998ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1999 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006 தேர்தலில் போட்டியிட்டுதோல்வியடைந்தார். 2011 தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்வானார்.
செல்லூர் ராஜு   
 வயது : 62
 படிப்பு : பி.எஸ்சி.
 ஊர் : செல்லூர், மதுரை.
 குடும்பம் : மனைவி ஜெயந்தி,
 மகள்கள் செளம்யா, ரம்யா
 பதவிகள்: மதுரை மாநகர் மாவட்டச் செயலர். 2011-இல் மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர். தற்போது அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு கூட்டுறவு மற்றும் தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.தங்கமணி
 வயது : 56
 படிப்பு : பி..
 ஊர் : பள்ளிபாளையம் அருகே
 கோவிந்தம்பாளையம்.
 குடும்பம் : மனைவி சாந்தி,
 மகள் லதாஸ்ரீ,
 மகன் தரணிதரன்.
 பதவிகள்: கோவிந்தம்பாளையம் அதிமுக கிளைக் கழக பிரதிநிதி, செயலாளர், 2001-ல் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகப் பதவி வகித்தார். 2006-ல் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினரான இவர், குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக 2011-ல் வெற்றி பெற்றார். 2011-2016 வரை அமைச்சர். தற்போது நாமக்கல் அதிமுக செயலாளராக பதவி வகித்து வருகிறார். கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
எஸ்.பி.வேலுமணி
 வயது : 47
 படிப்பு : எம்.., எம்.ஃபில்.
 ஊர் : கோவை சுகுணாபுரம்.
 குடும்பம் : மனைவி, மகன்,
 மகள் உள்ளனர்.
 பதவிகள்: கோவை மாவட்ட அதிமுக இளைஞரணிச் செயலராக அரசியலைத் தொடங்கிய இவர், 2001-இல் குனியமுத்தூர் நகராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்., 2006, 2011 தேர்தலில் வெற்றி பெற்றார்.
 சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறையின் அமைச்சராக 2011 மே 16-இல் பொறுப்பேற்றார்.
 மே 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவருக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் பதவி கிடைத்தது.
டி.ஜெயக்குமார்
 வயது : 55
 படிப்பு : பி.எஸ்.ஸி., பி.எல்.,
 ஊர் : சென்னை.
 குடும்பம் : மனைவி இந்திரா காந்தி,
 மகன் அருண்குமார்,
 மகள் காயத்ரி
 பதவிகள்: 1991 முதல் 5 முறை சட்டப் பேரவை உறுப்பினர். 1991-1996 வரையில் மீன்வளம், பால்வளம், வனத் துறை அமைச்சர். 2001-2006 வரையில் சட்டம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சர். 1998-இல் சென்னை துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர். 2011 முதல் 2012-ஆம் ஆண்டு வரையில், சட்டப் பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார். அதிமுக மாணவர் அணிச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
சி.வி.சண்முகம்
 வயது : 50
 படிப்பு : பிஏபிஎல்
 ஊர் : திண்டிவனம் வட்டம்,
 அவ்வையார்குப்பம்.
 குடும்பம் : மனைவி-கௌரி, மகன்-
 ஜெயசிம்மன், மகள் வள்ளி
 பதவிகள்: திண்டிவனத்தில் வழக்குரைஞராக இருந்த அவர், 1990-ஆம் ஆண்டில் அதிமுகவில் வடக்கு மாவட்டப் பிரதிநிதியாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். திண்டிவனம் தொகுதியில் 2001, 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் விழுப்புரம் தொகுதியில் 2011 தேர்தல் மற்றும் தற்போதைய (2016) தேர்தலிலும் என 4 முறை வெற்றி கண்டுள்ளார்.
 கடந்த 2011-இல் சட்டம், சிறைத் துறை மற்றும் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தார். 2001-06 அதிமுக ஆட்சியின் போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தார்.
கே.பி.அன்பழகன்
 வயது : 58
 படிப்பு : பி.எஸ்சி
 ஊர் : கெரகோடஹள்ளி, பாலக்கோடு
 வட்டம், தருமபுரி.
 குடும்பம் : மனைவி மல்லிகா, மகள் வித்யா,
 மகன்கள் சந்திரமோகன்,
 சசிமோகன்.
 பதவிகள்: தொடக்கம் முதலே அதிமுக கட்சி உறுப்பினரான இவர் 1997-இல் மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலர், 1998-இல் காரிமங்கலம் ஒன்றியச் செயலர், 2000, 2010-இல் அதிமுக மாவட்டச் செயலர், தற்போது மீண்டும் கட்சி மாவட்டச் செயலராக உள்ளார். 1996-இல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 2001, 2006, 2011 மற்றும் தற்போதைய (2016) தேர்தல் என நான்கு முறை பாலக்கோடு தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2003-இல் செய்தி, உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.
வி. சரோஜா
 வயது : 68
 படிப்பு : எம்பிபிஎஸ்.
 ஊர் : சேலம் மாவட்டம் சங்ககிரி.
 குடும்பம் : கணவர் டாக்டர்
 எல்.லோகரஞ்சன்.
 பதவிகள்: தற்போது அதிமுகவில் மாநில மகளிரணி இணை செயலாளர் பதவி வகித்து வருகிறார். 1989 முதல் அதிமுக உறுப்பினர், 1991-96 - சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர், 1998-1999 - ராசிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர், 1999-2004 - ராசிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர், 2004-2006 - தாட்கோ வாரியத்தலைவர், 2012-2013 - தகவல் உரிமை ஆணையத்தின் ஆணையர்.
கே.சி.கருப்பணன்
 வயது : 59
 படிப்பு : எஸ்எஸ்எல்சி
 ஊர் : காட்டுவலசு.
 குடும்பம் : மனைவி தேவி,
 மகன் டாக்டர் யுவராஜா
பதவிகள்: 1972-இல் கவுந்தப்பாடியை அடுத்த காட்டுவலசு அதிமுக கிளைச் செயலாளராக இருந்தார்.2001 முதல் 2006 வரை பவானி தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 2006-இல் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது மூன்றாவது முறையாக பவானி தொகுதியில் போட்டியிட்ட கே.சி.கருப்பணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைக் காட்டிலும் 24,887 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
எம்.சி.சம்பத்
 வயது : 58
 படிப்பு : எம்.எஸ்சி வேதியியல்.
 ஊர் : மேல்குமாரமங்கலம், பண்ருட்டி
 குடும்பம் : தமிழ்வாணி,
 மகன் பிரவீன், மகள் திவ்யா.
 பதவிகள்: டலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர்,
 2001ஆம் ஆண்டு நெல்லிக்குப்பம் தொகுதியில் வெற்றி பெற்று உள்ளாட்சி மற்றும் வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர்.
 2011ஆம் ஆண்டு கடலூர் தொகுதியில் வெற்றி பெற்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.
ஆர்.காமராஜ்
 வயது : 55
 படிப்பு : முதுகலைப் பட்டதாரி
 ஊர் : மன்னார்குடி அருகே எளவனூர்-
 சோத்திரியம் கிராமம்
 குடும்பம் : மனைவி கே. லதாமகேஷ்வரி,
 மகன்கள் மருத்துவர்கள்
 எம்.கே. இனியன், கே. இன்பன்.
 பதவிகள்: 1982-இல் மன்னார்குடி இராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மாணவர் தலைவரானார். 2001 முதல் 2007 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் மற்றும் கொறடா. 2006-இல் மன்னார்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி. 2003 முதல் தற்போது வரை மாவட்டச் செயலர் பதவி.
 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். 2016 தேர்தலில் மீண்டும் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.
.எஸ். மணியன்
 வயது : 61
 படிப்பு : பியூசி.
 ஊர் : வேதாரண்யத்தை அடுத்த
 ஓரடியம்புலம் கிராமம்.
 குடும்பம் : மனைவி கலைச்செல்வி,
 மகள்கள் பாரதி, வாசுகி
 பதவிகள்: 1972-இல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து, 1976-இல் ஒன்றியச் செயலாளராகவும் பின்னர் மாவட்டச் செயலாளர், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
 வகித்த பதவி: 1995-2001-இல் மாநிலங்களவை உறுப்பினராகவும், 2009 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று பதவி வகித்தவர். 1989 (அதிமுக ஜெ அணி), 2006 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
 வயது : 51
 படிப்பு : பி.காம்.
 ஊர் : உடுமலையடுத்த
 கோலார்பட்டி.
 .குடும்பம் : மனைவி ஆர்.கிருஷ்ணபிருந்தா,
 மகள் ஆர்.ஜெயபிரணிதா,
 மகன் ஆர்.நிவாஸ்ரீ
 பதவிகள்: அதிமுகவில் முதல்முதலாக இவர் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றினார். இதன் பின்னர் திருப்பூர் மாவட்டச் செயலாளராக 2012இல் நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரியத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். தற்போது திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளராக உள்ளார். தற்போதைய தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்..வாக தேர்வு செய்யப்பட்டார்.
சி. விஜயபாஸ்கர்
 வயது : 40
 படிப்பு : எம்பிபிஎஸ், பி.எல்
 ஊர் : விராலிமலைத் தொகுதிக்குள்பட்ட
 இலுப்பூர் அருகே ராப்பூசல் கிராமம்
 குடும்பம் : மனைவி ரம்யா, மகள்கள்
 ரித்தன்யா பிரியா, அனன்யா
 பதவிகள்: கட்சியில் முன்னாள் மாநில மாணவரணி செயலர், முன்னாள் மாவட்டச் செயலராகவும் இருந்தார்.
 கடந்த 2001-2006 -ல் புதுக்கோட்டை எம்எல்ஏவாகவும், 2011-ல் விராலிமலை எம்எல்ஏவாகவும் இருந்தார்.
 இதையடுத்து 2013 - 2016 வரை மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
 இவரது அண்ணன் இரா.சி. உதயகுமார்,
 தங்கைகள் மருத்துவர் தனலெட்சுமி, பொறியாளர் ராஜலெட்சுமி.
சண்முகநாதன்
 வயது : 53
 படிப்பு : 8ஆம் வகுப்பு
 ஊர் : தூத்துக்குடி மாவட்டம்,
 ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள
 பண்டாரவிளை.
 குடும்பம் : மனைவி ஆஷா,
 5 மகள்கள், ஒரு மகன்.
 பதவிகள்: தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலர். 2000இல் தூத்துக்குடி மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்ட இவர், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி பெற்று அமைச்சரானார்.
 தொடர்ந்து, 2006இல் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி செல்வராஜிடம் வெற்றி வாய்ப்பை இழந்த எஸ்.பி. சண்முகநாதன், 2011இல் மீண்டும் வெற்றி பெற்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானார். சில மாதங்கள் அப் பதவியில் இருந்த அவர், 2014 இல் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆர். துரைக்கண்ணு
 வயது : 68
 படிப்பு : பட்டப்படிப்பு
 ஊர் : பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரி.
 குடும்பம் : மனைவி பானுமதி,
 இரு மகன்கள், 4 மகள்கள்
 பதவிகள்: அதிமுகவில் 1972-ம் ஆண்டு இணைந்த இவர் மாணவரணி, இளைஞரணியில் பல்வேறு பொறுப்புகளிலும், கிளைக் கழகச் செயலராகவும் இருந்தவர். இப்போது பாபநாசம் அதிமுக ஒன்றியச் செயலராக உள்ளார்.
 இவர் பாபநாசம் தொகுதியில் 2006-ம் ஆண்டு முதல் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.
கடம்பூர் செ.ராஜு
 வயது : 57
 படிப்பு : ஆசிரியர் பட்டயப் படிப்பு
 ஊர் : கடம்பூர்
 குடும்பம் : மனைவி இந்திரா காந்தி,
 மகன் அருண்குமார்,
 மகள் காயத்ரி
 பதவிகள்: தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர், 2011 பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.எல்.. ஆனவர். இதே தொகுதியில் இத்தேர்தலில் 2ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
ஆர்.பி. உதயகுமார்
 வயது : 43
 படிப்பு : எம்காம்.,எம்.எஸ்.டபிள்யு.,பிஎல்
 ஊர் : ராமநாதபுரம் மாவட்டம்.
 குடும்பம் : மனைவி .தாமரைச் செல்வி,
 மகள்கள் பிரியதர்ஷினி,
 தனலெட்சுமி.
 பதவிகள்: ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலராக உள்ளார். 2011 தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் இருந்து பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் அமைச்சரவை மாற்றத்தில் வருவாய்த் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு மீண்டும் வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.டி.ராஜேந்திர பாலாஜி
 வயது : 48
 படிப்பு : 10-ஆம் வகுப்பு
 ஊர் : அருப்புக்கோட்டை (குருந்தமடம்)
 குடும்பம் : திருமணமாகாதவர்
 பதவிகள்: 1991இல் திருத்தங்கல் நகர கழக செயலாளர், 1996, 2001,2006 திருத்தங்கல் நகராட்சி துணைத் தலைவர், 2000-2011 வரை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர், விருதுநகர் மாவட்ட செயலாளர். 2011இல் செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர். தற்போது சிவகாசி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு ஊரக தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.சி.வீரமணி
 வயது : 52
 படிப்பு : பி..,
 ஊர் : இடையம்பட்டி, ஜோலார்பேட்டை.
 குடும்பம் : மேகலை (முதல் மனைவி),
 மகன் இனியவன், மகள் யாழினி,
 பத்மாஷினி (2}ஆவது மனைவி)
 மகள் அசிலா
 பதவிகள்: 1997 மதுல் 1999 வரை ஒன்றிய அதிமுக செயலாளராகவும், 1999 முதல் 2006 வரை மாவட்ட விவசாய அணிச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
 2006 முதல் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். 2011-இல் ஜோலார்ப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 2012-இல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2013-ஆம் ஆண்டு முதல் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்து வந்தார். தற்போது ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றார்.
பா.பெஞ்சமின்
 வயது : 47
 படிப்பு : பி..,
 ஊர் : நொளம்பூர்
 குடும்பம் : மனைவி ஷீலா, மகன்கள்
 விஜய்பெர்லின் (23),
 சாம்சன்பால் (21).
 பதவிகள்: 1988-இல் அதிமுகவில் சேர்ந்தார். அயனம்பாக்கம் அதிமுக கிளை செயலாளராகவும், 1991 முதல் திருவேற்காடு 4-ஆவது வட்ட கிளைச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளராக இருந்தார். 2015 முதல் மதுரவாயல் பகுதி செயலாளராக பணியாற்றி வருகிறார். 2011-இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் 145-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து துணை மேயராக நியமிக்கப்பட்டார். தற்போது வரை அப்பதவியில் நீடித்து வருகிறார்.
வெல்லமண்டி என்.நடராஜன்
 வயது : 66
 படிப்பு : எஸ்எஸ்எல்சி
 ஊர் : திருச்சி மாவட்டம்.
 குடும்பம் : மனைவி என். சரோஜாதேவி,
 மகன்கள் கிருபாகரன்,
 ஜவஹர்லால் நேரு
 பதவிகள்: 1972-ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். திருச்சி நகரக் கூட்டுறவு வங்கித் தலைவராகவும், நகரக் கூட்டுறவு வங்கி இணையத்தின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பில் உள்ளார்.
 கடந்த 2000 முதல் 2003-ம் ஆண்டு வரை மாநகர் மாவட்ட அதிமுக செயலராக பொறுப்பு வகித்தார். 2003-ம் ஆண்டு முதல் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவராக உள்ளார். முதல் முறையாக பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எஸ். வளர்மதி
 வயது : 51
 படிப்பு : எம்ஏ. பி.எல்.,
 ஊர் : ஸ்ரீரங்கம்
 குடும்பம் : கணவர் சீதாராமன்
 பெல் ஊழியர். மகன்கள்
 ஸ்ரீராம், ஹரிராம்.
 பதவிகள்: 1983-ம் ஆண்டில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த வளர்மதி, சட்டக்கல்லூரியில் மாணவரணிச் செயலர், மாவட்ட மகளிரணித் துணைச் செயலர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.
 முத்தரையர் இனத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீரங்கம் தொகுதியில் 2015-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து கட்சியின் அமைப்புச் செயலர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து 2016 பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வி.எம்.ராஜலட்சுமி
 வயது : 30
 படிப்பு : எம்.எஸ்சி. பி.எட்.
 ஊர் : சங்கரன்கோவில்
 குடும்பம் : கணவர் வி. முருகன்,
 மகள் ஹிரணி (9),
 மகன் பிரதீப் (7).
 பதவிகள்: 2004முதல் இளம்பெண்கள் பாசறையில் 18 ஆவது வார்டு செயலர். 2015இல் நகர அதிமுக இணைச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 தேர்தல் அனுபவம்: சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவியாக 2014இல் தேர்வு. தற்போது சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் எம். மணிகண்டன்
 வயது : 40
 படிப்பு : எம்.பிபி.எஸ். எம்.எஸ்.
 ஊர் : ராமநாதபுரம்
 குடும்பம் : மனைவி வசந்தி,
 மகள்கள் லீலா, லெனிஷா
 பதவிகள்: மாநில மருத்துவ அணியின் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்.ஆர். விஜயபாஸ்கர்
 வயது : 42
 படிப்பு : பி..,
 ஊர் : கரூர்
 குடும்பம் : மனைவி வி. விஜயலட்சுமி,
 மகள்கள் வி. அட்சயா
 நிவேதா, வி.அஸ்வதவர்ணிகா.
 பதவிகள்: 2006 முதல் ஒன்றியக் கழகச் செயலாளர் (தாந்தோணி), 2004 முதல் 2006 வரை: கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர். உள்ளாட்சி பதவி: ஒன்றியக்குழு உறுப்பினர் (தொடர்ந்து 3 முறை தேர்வு 2001, 2006 மற்றும் 2011).
                                                                                         

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top