சும்மா இருந்தாலும் மாதாந்தம்
3 லட்சத்து 58 ஆயிரம்
ரூபாய் சம்பளம்
சுவிட்சர்லாந்தில் புதுமை திட்டம்!
சுவிட்சர்லாந்தில், வேலைக்கு சென்றாலும், வேலைக்கு செல்லாவிட்டாலும், ஒவ்வொரு குடிமகனுக்கும், மாதந்தோறும், (2500 டாலர்) 3 லட்சத்து
58 ஆயிரம் ரூபாவை அந்நாட்டு அரசு சம்பளமாக தரவுள்ளது.
இலவசங்கள் சரியா, தவறா என்ற விவாதம், பல நாடுகளிலும் நடக்கிறது. இந்நிலையில், உலகின் செல்வம் மிகுந்த நாடுகளில் ஒன்றான, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, புதுமையான திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதன்படி, அந்நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும், வேலைக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும், மாதந்தோறும், ,
2500 டாலரை சம்பளமாக அரசே வழங்கும்.
குழந்தைகளுக்கு,
(625 டாலர்) 89 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்.வறுமையை ஒழிக்கும் நோக்குடன், அந்நாட்டில் சில அறிஞர்கள், இந்த திட்டத்தை முன்வைத்தனர். அந்த திட்டத்தை, அரசு ஏற்றது. எனினும், அங்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு, பொதுமக்களின் ஒப்புதல் அவசியம்.
எனவே, இதற்கு ஒப்புதல் கோரி, ஜூன் 5ல், பொது வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்தால், இந்த திட்டம் அமுலுக்கு வரும். இதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால், அந்நாட்டில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர்.
0 comments:
Post a Comment