சிரியாவில்
ரஷிய விமானப்படை தளம் மீது
ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் தாக்குதல்!
சிரியாவில்
ரஷிய விமானப்படை
தளம் மீது
ஐ.எஸ்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஹெலிகாப்டர்கள், லாரிகள்
தீயில் எரிந்து
நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
சிரியா
மற்றும் ஈராக்கில்
2011–ம் ஆண்டில்
பெரும் பாலான
பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள்
கைப்பற்றினர். அந்த பகுதிகளை தாக்குதல்கள் மூலம்
சிரியா, ஈராக்
ராணுவங்கள் மீண்டும் கைப்பற்றி வருகின்றன.
சிரியாவில்
பல்மைரா, ஹோம்ஸ்
நகரங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம்
இருந்து ராணுவம்
கைப்பற்றியுள்ளது. இந்த நகரங்களுக்கு
இடையில் டி–4
ராணுவ தளம்
உள்ளது. தற்போது
இது ரஷியாவின்
வசம் உள்ளது.
அங்கு ரஷிய
ராணுவம் முகாமிட்டுள்ளது.
சமீபத்தில்
அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள்
அதிரடி தாக்குதல்
நடத்தினார்கள். குண்டுகள் மற்றும் ராக் கெட்டுகள்
வீசப்பட்டன. அதில் ரஷியாவுக்கு சொந்த மான
4 எம்.ஐ.–24
ரக ஹெலிகாப்டர்கள்
தீயில் எரிந்து
நாசமாயின.
மேலும்
20 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. அவற்றில் ராணுவ
தளவாடங்கள், ராக்கெட்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் நிரப்பி
வைக்கப்பட்டிருந்தன.
தீவிரவாதிகள்
இத்தாக்குதல்களில் சிரியாவின் மிக்–25
ரக போர்
விமானமும் பலத்த
சேதம் அடைந்தது.
இந்த தகவலை
அமெரிக்க உளவுத்துறை
அதிகாரி ஸ்பார்ட்போரிஸ்
தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து
ரஷியா எந்த
கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
0 comments:
Post a Comment