தமிழகப் பேரவைத் தேர்தலில்
36 ஆண்டுகளுக்கு பின்
இந்திய யூனியன் முஸ்லிம்
லீக் வெற்றி
தமிழகப் பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி இத்தொகுதியில் மட்டுமே வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடையநல்லூர் உட்பட 5 தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டது. இதில், கடையநல்லூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் போட்டியிட்டார்.,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மதுஅபூபக்கர் 1194 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் 1980இல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட ஆ. சாகுல்ஹமீது வெற்றி பெற்றார். 36 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது

0 comments:
Post a Comment