நைஜீரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட
சிபோக் பாடசாலை மாணவி அமீனா அலி
மீட்பு!
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடந்தப்பட்ட 219 சிபோக் நகரப் பாடசாலை மாணவிகளில் ஒருவர், இரண்டு ஆண்டுகள் கழித்து மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத் தலைவர் மற்றும் உள்ளூர் குழுத் தலைவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிபோக் நகரக் குழுத் தலைவர் அய்யூபா ஆலம்ஸன் கூறியிருப்பதாவது:
சிபோக் நகரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அமீனா அலி என்ற மாணவி, சம்பிஸா வனப் பகுதியில் தன்னார்வப் படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டார்.
சிபோக் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட 216 மாணவிகளில் அவரும் ஒருவர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை உறுதி செய்த கடத்தப்பட்ட சிபோக் மாணவிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் யாகூபு நிகேகி, கடத்தப்பட்டபோது அமீனா அலிக்கு 17 வயது ஆகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
நைஜிரியாவின் சிபோக் நகர பெண்கள் பாடசாலையிலிருந்து 276 மாணவிகளை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
கடத்தப்பட்ட மாணவர்களில் 57 பேர் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி வந்தாலும், எஞ்சிய 219 பேரது நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லாமல் இருந்து வந்தது.
இந்தச் சூழலில், அவர்களில் ஒரு மாணவி முதல் முறையாக மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment