கடுகண்காவ மண்
சரிவினால் ஆறுபேர் உயிருடன் புதையுண்ட
இடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் ஹக்கீம்
கடுகண்காவ, இலுக்குவத்தை, ரம்மலக கிராமத்தில்
மண் சரிவினால் ஆறுபேர் உயிருடன் புதையுண்டனர். அப்பிரதேசத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று 21 ஆம் திகதி சனிக்கிழமை சென்று மண் சரிவினால் ஆறுபேர் உயிருடன் புதையுண்ட இடத்தைப் பார்வையிட்டார்.
மண் சரிவைத் தொடர்ந்து அச்சத்துக்கு உள்ளாகியிருக்கும்
கிராமவாசிகளுக்கு சேத மதிப்பீட்டைப் பொறுத்து, வேறு இடங்களில் மாற்றுக் காணிகளைப் பெற்று வீடுகளை
அமைத்துக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் இங்கு
உறுதிமொழி வழங்கினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசியத் தேவைகளுக்காக வழங்குவதற்கு
அங்கிருக்கும் பள்ளிவாசல் தலைவரிடம் 5 இலட்சம் ரூபா நிதி உதவியையும் கையளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஏ.ஆர்,ஏ. ஹபீஸ் ஆகியோரும் அமைச்சருடன் அங்கு
சென்றிருந்தனர்.






0 comments:
Post a Comment