பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட
பிரதமர் சேதவத்தைக்கு விஜயம்
நாடாளுமன்ற
உறுப்பினர் மரைக்காரும் உடன் சென்றிருந்தார்
களனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு
இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று
சேதவத்தை பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக
களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து சுமார் ஒரு இலட்சம் வரையான பொதுமக்கள்
இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக நலன்புரி முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும்
வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட
தமிழ் மக்களை பார்வையிட்டு ஆறுதல் கூறும் நோக்கில் பிரதமர் சேதவத்தைக்கு விஜயம்
செய்திருந்தார். இதன்போது அவருடன் நாடாளுமன்ற உறுப்பினரான மரைக்கார், உள்ளிட்ட
குழுவினரும் சென்றிருந்தனர்.

0 comments:
Post a Comment