எகிப்து கடலுக்குள் விமானம் விழுந்து 66 பேர் பலி?
பிரான்ஸிலிருந்து எகிப்து நோக்கி 66 பேருடன் சென்று கொண்டிருந்த பயணிகள் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.
இந்த சம்பவத்துக்கு பயங்கரவாத சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்று கூறிய அதிகாரிகள், தொழில்நுட்பக் காரணமாகவும் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ நோக்கி "எகிப்து ஏர்' நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தில் 3 குழந்தைகள் உட்பட 56 பயணிகள், ஏழு விமானப் பணியாளர்கள், 3 விமானப் பாதுகாவலர்கள் இருந்தனர்.
இந்த நிலையில் நடுவழியில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட அந்த விமானம், மத்தியதரைக் கடலில் விழுந்து நொறுங்கியது என் தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 comments:
Post a Comment