ஐ.தே.க
மேதின கூட்டதில் 75000 பேர்
நாட்டின் பிரதான கட்சிகளின் மேதின பேரணியும் கூட்டமும்
நேற்று நடைபெற்றது. இந்த பேரணிகளின் போது கலந்து கொண்ட மக்கள் தொடர்பான தகவல்களை
அடங்கிய புள்ளிவிபரத்தினை புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியினால் பொரளை கெம்பல்
மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கூட்டத்தில் 75000 மக்கள் கலந்து
கொண்டதாக புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் காலியில் இடம்பெற்ற
மேதின கூட்டத்தில் 40000 பேர் வரையில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை பிரமாண்டமான பிரச்சாரத்திற்கு மத்தியில், மஹிந்த தலைமையில் கிருலப்பனையில் நடைபெற்ற
மேதின கூட்டத்தில் 15000 பேர் வரையில் கலந்து கொண்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
பேரணிக்கு அனைத்து மதம் மற்றும் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு கிழக்கு
உட்பட நாடு முழுவதிலும் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள மக்கள் கலந்து கொண்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கிருலப்பனையில் இடம்பெற்ற பேரணியில் கொழும்பு
மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் ஹம்பாந்தோட்டவில் இருந்து அதிக
மக்களும் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி கொழும்பு பீ.ஆர்.சீ மைதானத்தில்
நடத்திய பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 7000 மாத்திரம் எனவும், அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு மே தின பேரணியில்
கலந்துகொண்டு எண்ணிக்கைக்கு சமமானதென தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான தமிழ் தேசிய
கூட்டமைப்பின் பேரணி கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் 800 – 1000 இடைப்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்
0 comments:
Post a Comment