87 வாக்குகள் வித்தியாசத்தில் விடுதலைச் சிறுத்தைகள்
கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தோல்வி
தமிழகப் பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாக.முருகுமாறன் வெற்றி பெற்றார்.
இந்தத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:
நாக.முருகுமாறன் (அதிமுக)-
48,450, தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்)- 48,363, கே.ஐ.மணிரத்தினம் (காங்கிரஸ்)- 37,346, அன்பு.சோழன் (பாமக)- 25,890, எஸ்.பி.சரவணன் (பாஜக)- 822, எஸ்.கலைவாணன் (பகுஜன் சமாஜ்)- 380, இ.ஜெயஸ்ரீ (நாம் தமிழர் கட்சி)- 1,055, கே.அன்பழகன் (சுயே)- 1,360, டி.திருமாவளவன் (சுயே)- 289, ஆர்.ரவிச்சந்திரன் (சுயே)- 206, நோட்டா - 1,025.
பதிவான மொத்த வாக்குகள்-1,65,186.
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் நாக.முருகுமாறனுக்கு வெற்றி பெற்றதற்கான அத்தாட்சி சான்றிதழை தேர்தல் அதிகாரி முத்துக்குமாரசாமி வழங்கினார்.


0 comments:
Post a Comment