“ஒரு பூ மீண்டும் மலர்கிறது”
நூல் வெளியீட்டு விழா!
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எச்.ஏ
பஷீர் (துய்யோன்) எழுதிய “ஒரு பூ மீண்டும் மலர்கிறது” ” நூல் வெளியீட்டு விழா நேற்று 19ஆம் திகதி வியாழன் மாலை மருதானை தெமட்டக்கொட வீதி வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
நூலின் முதல் பிரதியை தேசமான்ய அப்துல் கையூம் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் உயர்அதிகாரி ஏ.எல்.ஏ. அஸீஸ், ஓய்வு பெற்ற சுங்கத் திணைக்கள அதிகாரி எஸ்.எச்.முஹம்மத் அலி, டாக்டர் ஸனூஸ் காரியப்பர், ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்தீன், இலங்கை இஸ்லாமிய
ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் காதியுமான எம்.வை.ஏ.பாவா, உலமாக் கட்சித் தலைவர்
முபாறக் அப்துல் மஜீத் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.







0 comments:
Post a Comment