சாய்ந்தமருதில் முதியோர் மத்திய நிலையம்
அமைக்கக் கோரிக்கை
சாய்ந்தமருதில் உள்ள முதியோர் சங்கங்கள், அரச சேவை ஓய்வூதியர் சங்கம் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் சபை ஆகியன இணைந்து இங்கு ஒரு முதியோர் மத்திய நிலையத்தை ஸ்தாபிக்குமாறு சாய்ந்தமருது பிரதேச செயலாளரைக் கோரி மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.
சாய்ந்தமருதில் வாழும் சுமார் 30,000 மக்களுள் 3500 பேர் (2500 குடும்பம்) முதியவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களாக வாழ்கின்றனர். சிலர் பிள்ளைகளின் உதவியில் வாழ்கின்றனர். சிலர் தமது வருமானம் அல்லது ஓய்வூதியம் மூலம் வாழ்கின்றனர். எனினும் அநேகமானவர்கள் தமக்குத் தேவையான அளவு வருமானம் அற்றவர்களாகவும் தமக்கென வீடு,சொத்துக்கள் அற்றவர்களாகவும் வாழ்வது அவர்களது சுதந்திரத்தைப் பாதிக்கின்றது. மேலும் சமூகத்தில் முதியோருக்கான வசதிகள்,பாதுகாப்புகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை. எனவே முதியோர் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த மத்திய நிலையம் அவசியம் என மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள மத்திய நிலையத்தில் பொழுது போக்கு வசதிகள்,முதியோருக்கான அறிவூட்டல்கள்,முதியோர் கவனிப்பாளர் பயிற்சி,முதியோர் உணவுத் தேவைகள், முதியோர் சிகிச்சை முகாம்கள், போக்குவரத்து வசதிகள், போன்ற வசதிகள் ஏற்படுத்தமுடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதியோர் மத்திய நிலையம் வெற்றிகரமாக அமைவுற அரசியல் தலைமத்துவங்களினதும் முதியோர் நலனில் அக்கறையுள்ள தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களினதும் உதவியும் ஒத்தாசையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்
தலைவர், சாய்நதமருது சிரேஷ்ட பிரஜைகள் சபை
0 comments:
Post a Comment