தற்காலிகமாக
மூடப்பட்ட களனிப் பல்கலைக்கழகம்
ஜுன் மாதம் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பம்
நோயின்
தாக்கம் ஒன்றினால்
தற்காலிகமாக மூடப்பட்ட களனிப் பல்கலைக்கழகமானது எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம்
திகதி மீண்டும்
திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகமானது
நாளைய தினம்
திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது
தற்போது மாற்றப்பட்டுள்ளதாக
பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல்கலைக்கழக
விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மே மாதம்
31ம் திகதி
பகல் 12 மணிக்கு
விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் நிர்வாகத்தினரால்
கோரப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment