பாக்தாத் சந்தையில் கார் வெடிகுண்டு தாக்குதல்:
64 பேர் பலி 87 பேர் காயம்
ஈராக்
தலைநகரான பாக்தாத்
சந்தை ஒன்றில்
காரில் வைக்கப்பட்டிருந்த
வெடிகுண்டு வெடித்ததில் 64 பேர் பலியாகியுள்ளனர்,
ஈராக்
தலைநகரான பாக்தாத்தின்
ஷியா முஸ்லிம்கள்
அதிகம் நிறைந்த
Sadr நகரில் உள்ள சந்தை ஒன்றில் இன்று
காலை மக்கள்
கூட்டம் அதிகம்
நிறைந்த நேரத்தில்
இந்த வெடிகுண்டு தாக்குதல்
நடந்துள்ளது.
இத்தாக்குதலில்
இதுவரையில் 64 பேர் பலியாகியுள்ளனர், 87 பேர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள்
செய்திகள் வெளியிட்டுள்ளன..
இந்த
தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதுடன்,
ஷியா முஸ்லிம்களை
குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தை
நேரில் பார்த்தவர்கள்
கூறுகையில், காய்கறி மற்றும் பழங்களால் நிரப்பப்பட்ட
வாகனம் ஒன்று
சந்தைக்கு வந்ததாகவும், பின்னர் வாகனத்தை நிறுத்திவிட்டு
சாரதி மக்களோடு
மக்களாக கலந்து
விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர்
திடீரென அந்த
வாகனம் வெடித்து
சிதறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment