போலி தயாரிப்புகள்: சீனா முதலிடத்தில்


போலி தயாரிப்புகளில் சர்வதேச அளவில் சீனா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  
சர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து Organization for Economic Cooperation and Development பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆய்வு மேற்கொண்டது.
அதன் ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: போலி பொருள்கள் வர்த்தகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகளில் 63 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்ப்பட்டவை.
அதற்கு அடுத்தபடியாக துருக்கியிலிருந்து தயாரான போலி பொருள்கள் 3.3. சதவீதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளின் போலி தயாரிப்புகள் முறையே 1.9, 1.6 சதவீதம் இருந்தன.
பறிமுதல் செய்யப்பட்டதில் இந்தியாவில் தயாரான பொருள்கள் 1.2 சதவீதம் இருந்தன. இந்தியா 5-ஆம் இடத்தில் உள்ளதாகவும் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top