முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம்

கிளிநொச்சிக்கு விஜயம்

நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில்
கலந்து கொண்டுள்ளார்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாணத்திற்கான நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது .
குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் நீர்வழங்கல் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமானதுடன், இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண அமைச்சர்கள் குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண அரசாங்க அதிபர்கள், இரணைமடு குளத்தின் பொறியியலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top