அரசியல்வாதிகள் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்திய

கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்துள்ள வெல்லம்பிட்டி மக்கள்



வெல்லம்பிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் வெள்ளம் காரணமாக மிகவும் கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன.
இந்த பிரதேசங்களுக்கு நிவாரண பொருட்களுடன் சென்ற அரசியல்வாதிகள் இருவர் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் அமைச்சர்கள் மீது தங்கள் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியதைக் கேட்கக் கூடியதாக இருந்தது.
தாம் வாக்களித்து தெரிவு செய்த அரசியல்வாதிகள் தங்களின் அவல நிலையை பார்க்க தாமதித்து வருகை தந்ததாக குற்றம்சாட்டி, அவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிக்காட்டி இருந்தனர்.

நிவாரணம் இல்லாவிடினும் பரவாயில்லை, இவர்களால் இங்கு வந்து எமக்கு ஆறுதல் கூறக்கூட நேரமில்லையா என கவலைபடத் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top